
நாளை புத்தாண்டு தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஏற்படும் விபத்துக்களை விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
நாளை புத்தாண்டு தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் இதற்கான ஏற்பாடுகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஏற்படும் விபத்துக்களை எதிர்கொள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் விபத்துகள் ஏற்படும் பகுதிகள் கண்டறியப்பட்டு 50 ஆம்புலன்ஸ்கள் மற்றும் 15 இருசக்கர ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட உள்ளன.தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் சேவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் சென்னை ராஜீவ் காந்தி அரச் மருத்துவமனை ராயப்பேட்டை கீழ்ப்பாக்கம் மருத்துவமனை அரச் ஸ்டான்லி மருத்துவமனை மாமல்லபுரம் தாம்பரம் ஈஞ்சம்ப்பாக்கம் பாடிநல்லூர ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள விபத்துக் காய நிலைப்படுத்துதல் மையங்களிலும் கூடுதல் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியில் இருப்பார்கள். என்றும் தெரிவித்துள்ளார்.
Comprehensive precautionary measures arranged by the Ministry of Health & Family Welfare as the state prepares to welcome the new year.#CVB #108ambulance #NewYearsEve pic.twitter.com/CRZusRClbO
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) December 31, 2019



