இடியுடன் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மைய அறிக்கை!

சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்

Regional Meteorological Center 1 - 2026

தமிழகம், புதுச்சேரியில் பல இடங்களில் இடியுடன் கூடிய மழைபெய்ய வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குமரிக்கடல் பகுதியில் தற்போது நிலவி வரும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியால் தமிழகம், புதுச்சேரியில் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும். அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகும்! எனவே மீனவர்கள் அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப் படுகிறது. இன்று அதிக அளவாக நாகப்பட்டினத்தில் 8 செ.மீ., மழை பதிவானது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் 7 செ.மீ, மழை பதிவானது. ராமேஸ்வரத்தில் 6 செமீ., வேதாரண்யம், ஸ்ரீவைகுண்டம் ஆகிய இடங்களில் 5 செ.மீ., பாம்பனில் 4 செ.மீ., மழை பதிவானது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.