ஆம் ஆத்மி, பாஜக., காங். தேர்தல் ஆணையம்… எல்லோரும் ‘ஹேப்பி’!

Published:

aam adhmi arvind kejriwal - 2026

தில்லி சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் வெளியாகி வருகின்றன. இந்த முடிவுகள் பல தரப்பையும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது என்பதுதான் இதில் கவனிக்கப் பட வேண்டிய விஷயம். தில்லி சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் வெளியாகி வருகின்றன. இந்த முடிவுகள் பல தரப்பையும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது என்பதுதான் இதில் கவனிக்கப் பட வேண்டிய விஷயம். தில்லி சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் வெளியாகி வருகின்றன. இந்த முடிவுகள் பல தரப்பையும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது என்பதுதான் இதில் கவனிக்கப் பட வேண்டிய விஷயம்.

தில்லி சட்டப்பேரவை தேர்தலில், ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியாமல் காணாமல் போன காங்கிரஸ் கட்சி, உண்மையில் வருத்தப் பட்டுக் கொண்டிருக்க வேண்டும். ஆனால், அது மகிழ்ச்சியுடன் இருக்கிறது. தில்லியை ஆண்ட கட்சியான காங்கிரஸ் இப்போது ஆம் ஆத்மியிடம் ஆட்சியைப் பறிகொடுத்து விட்டாலும், ஆம் ஆத்மி கட்சியின் வெற்றியைக் கொண்டாடி வருகிறது.

ALSO READ:  திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!
aap 3 - 2026

இந்த தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, இந்த வெற்றி முடிவுகள் பாஜகவின் வகுப்புவாத கொள்கைக்கு எதிராக மக்கள் தீர்ப்பு அளித்துள்ளதை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது என்று மகிழ்ச்சி தெரிவித்தார். 3வது முறையாக ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான்! இந்த தேர்தலில் காங்கிரஸின் தோல்வி வருத்தத்திற்குரியது தான் என்றாலும், ஆம் ஆத்மியின் வெற்றி பாஜகவின் வகுப்புவாத கொள்கைக்கு எதிரானது என்று கூறி, தாங்கள் மகிழ்ச்சியுடன் இந்தத் தேர்தல் முடிவுகளைப் பார்ப்பதாகக் கூறினார்.

தில்லியை ஆண்ட கட்சியான பாஜக., வெங்காய விலையால் ஆட்சி பறி போன பின்னர் மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர முடியாமல் தவிக்கிறது. இப்போதும் தோல்வியே என்றாலும், கடந்த தேர்தலில் பெற்ற இடங்களை விட கூடுதலாக இடங்கள் பெற்றும், வாக்கு சதவீதம் உயர்ந்தும் வருவது தங்களது செல்வாக்கு மீண்டும் வளர இடம் கொடுத்திருப்பதாக பாஜக., மகிழ்ச்சி அடைந்துள்ளது.

election commission - 2026

எந்த வித அரசியல் பின்புலமும் இல்லாமல் வெறும் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், நாடகங்கள், அரசியல் ஸ்டண்டுகள் மூலமாகவே கட்சியைத் தொடங்கி மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்து, சாதனை படைத்ததில், ஆம் ஆத்மி கட்சி மகிழ்ச்சி அடைந்துள்ளது.

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

இந்த மூன்று தரப்பும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது சரிதான்… ஆனால் தேர்தல் ஆணையமும் இப்போது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும். காரணம், துடைப்பக்கட்டை சின்னத்தை வாக்குப் பதிவு இயந்திரங்களில் காணாமல் போக்கி, கோல்மால் செய்து, எங்கள் வெற்றியைப் பறித்து விட்டார்கள் என்று, வாக்குப் பதிவு இயந்திரங்களைக் குறை சொல்லி, ஆம் ஆத்மி இப்போது போராடாது என்பதுதான்! ஏற்கெனவே அதற்காகத்தான் அரவிந்த் கேஜ்ரிவால் டிவிட்டர் பதிவில் தேர்தல் ஆணையத்தை சந்தேகித்து கருத்துப் போட்டு, முன்னதாகவே துண்டு போட்டு விட்டார். இப்போது அந்த அவச்சொல்லில் இருந்து தப்பித்து விட்டதற்காக தேர்தல் ஆணையமும் இந்தத் தேர்தல் முடிவுகளில் மகிழ்ச்சி அடைந்திருக்கும்!

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img