தங்கம் விலை சவரனுக்கு ரூ.176 குறைவு!

Published:

gold shop - 2026

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 176 குறைந்து ரூ. 30,952-க்கு விற்பனையாகிறது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களுடன் இருந்த நிலையில், தொடர்ந்து 2வது நாளாக தங்கம் விலை குறைந்து வருகிறது.

செவ்வாய்க்கிழமை இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.22 குறைந்து ரூ.3,869க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.176 குறைந்து, ரூ.30,952க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலையும் சற்று குறைந்துள்ளது. சில்லறை விற்பனையில் ரூ.30 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.49.80க்கும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.300 அதிகரித்து ரூ.49.800-க்கும் விற்கப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை தங்கம் வெள்ளி விலை நிலவரம்

1 கிராம் தங்கம் …………………..3,869
1 சவரன் தங்கம் ………………… 30,952
1 கிராம் வெள்ளி ……………… 49.80
1 கிலோ வெள்ளி ……………..49,800

ALSO READ:  நீரில்லா வைகை; வறண்டு போன மணலாற்றில் ஆடி அமாவாசை வழிபாடு!

Related articles

Recent articles

spot_img