ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: மார்ச் 16க்கு ஒத்திவைப்பு

சற்றுமுன்

  Maran-brothersபுது தில்லி: சிபிஐ தொடர்ந்த ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் மாறன் சகோதரர்கள் ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் மார்ச் 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப் பட்டது. முன்னதாக, ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனும், அவரது சகோதரர் கலாநிதி மாறனும் தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராயினர். மாறன் சகோதரர்கள் தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளனர். இவர்களின் ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் மார்ச் 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சன் டைரக்ட் நிறுவனத்தின் நிர்வாகி சுவாமிநாதனிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மலேசியாவைச் சேர்ந்த தொழிலதிபர் அனந்த கிருஷ்ணன் உள்ளிட்ட மலேசியாவில் உள்ள 2 பேருக்கும் சம்மன் அனுப்பப்படாததால், அவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகவில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.