சென்னை:
நடிகர் பார்த்திபன் புதிய பீப்பீ பாடலை எழுதி வெளியிட்டுள்ளார். துதா நிகித லகுதா என்று அர்த்தமற்ற வரிகளைக் கொண்டு நோ மீனிங்ச்., ஒன்லி ஃபீலிங்க்ஸ் என்ற அறிமுகத்துடன் அந்தப் பாடலை யுடியூபில் உலவ விட்டுள்ளார்.
சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போது நடிகர் பார்த்திபன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கினார். தற்போது சென்னை மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில் நடிகர் பார்த்திபன் வெள்ளப் பாதிப்பு பற்றி இந்தப் பாடலை எழுதி வெளியிட்டுள்ளார்.
இது குறித்து நடிகர் பார்த்திபன் கூறுகையில்,
ஒரு சராசரி மனிதனாக வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்தேன். ஒரு வீட்டில் துக்க நிகழ்ச்சி நடந்தால் அந்த துக்கத்தை மறக்க சில நாட்களில் ஏதாவது நல்ல காரியத்தை நடத்துவார்கள். அதே போல் சென்னையும் மீண்டும் பழைய நிலைமைக்கு வர வேண்டும் என்று ஒரு பாடல் உருவாக்க நினைத்தேன். அந்த பாடலை நான் எழுத சத்யா இசையமைத்தார். தற்போது ‘‘பீப்’’ பாடல் தமிழகத்தில் பரபரப்பாக இருப்பதால் இப்பாடலை ’’பீபீ’’ என்று தொடங்குவது போல எழுதினேன்.
இந்தப் பாடலில் வெள்ள பாதிப்பின்போது பொது மக்களுக்கு உதவிய தன்னார்வலர்களை ஆட வைத்தேன். இதில் சமுத்திரக்கனி, மயில்சாமி ஆகியோரும் பங்கேற்றுள்ளனர். துயரப் பருப்பு, கவலைப் பருப்பு என பருப்பில் புதிய வகைகளை அறிமுகப்படுத்தி இருக்கிறேன். மக்களிடையே இருக்கும் மனித நேயத்தை வெளியே கொண்டு வர வேண்டும் என்பதுதான் இந்த பாடலின் நோக்கம். மீ அன்ட் யூடியூப் என்ற பெயரில் ஒரு யூடியூப் சேவை தொடங்கி அதில் இந்த பாடலை பதிவேற்றம் செய்துள்ளேன் … என்றார்