காவல்துறையின் அடக்குமுறைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் மு.க.ஸ்டாலின். திமுக பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் முகனூலில் பதிவு செய்துள்ள கருத்து… வேளாண்மை பொறியாளர் முத்துக்குமாரசாமி தற்கொலை குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று கழகத்தின் சார்பில் கோரிக்கை வைத்தும் இதுவரை அ.தி.மு.க அரசு அந்த விசாரணையை சி.பி.ஐ வசம் ஒப்படைக்கவில்லை. தற்போது நடந்து வரும் சி.பி.சி.ஐ.டி விசாரணையில் எவ்விதமான முன்னேற்றமும் இல்லை. அதை விட இந்த வழக்கை விசாரிக்கும் சி.பி.சி.ஐ.டி என்ற விசாரணை அமைப்பிற்கு உள்கட்டமைப்பு வசதிகளோ அல்லது போதிய எண்ணிக்கையில் போலீஸ் அதிகாரிகளோ – ஏன் இது போன்ற வழக்குகளை விசாரிக்கும் அளவிற்கு மன உறுதியோ அந்த அமைப்பிற்கு இருப்பதாகத் தெரியவில்லை. தற்போது மதுரையில் உள்ள சென்னை உயர்நீதிமன்ற அமர்வின் நீதிபதி அவர்கள் “சி.பி.சி.ஐ.டி. அமைப்பின் புலனாய்வு திறமை” பற்றியே சந்தேகம் எழுப்பியுள்ளார். குறிப்பாக வருமான வரித்துறையின் ஓய்வு பெற்ற இணை ஆணையர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் இரட்டைக் கொலை செய்யப்பட்ட வழக்கில் பத்து வருடமாகியும் சி.பி.சி.ஐ.டி.யால் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால் இப்படிப்பட்ட கருத்தைக் கூறியுள்ள நீதிபதி அவர்கள், “இந்த சூழ்நிலையில் சி.பி.ஐ. விசாரணை கோருவதைத் தவிர தமிழக மக்களுக்கு வேறு வழி என்ன இருக்கிறது?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். சி.பி.சி.ஐ.டி. அமைப்பின் விசாரணை திருப்திகரமாக இல்லை என்பது ஒரு புறமிருக்க, அ.தி.மு.க. அமைச்சர்கள் தொடர்ந்து அதிகாரிகளை சட்டவிரோதமான காரியங்கள் செய்யச் சொல்லி வற்புறுத்துகிறார்கள். அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு நிலைமையோ முற்றிலும் சீர்குலைந்து விட்டது. ஆளுங்கட்சியை விமர்சிப்பவர்கள் மீது அ.தி.மு.க. அரசு காவல்துறையைப் பயன்படுத்தி அடக்குமுறை ஏவுகிறது. இது போன்ற அடக்குமுறைக்கும், தவறான காரியங்களுக்கும் காவல்துறையைப் பயன்படுத்தும் அ.தி.மு.க. அரசுக்கும் தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆட்சியில் நடக்கும் அதிகாரிகளின் மரணங்களுக்கு நீதி கிடைக்காமல் போவதை தி.மு.க என்றைக்கும் அனுமதிக்காது. வழக்கு சி.பி.ஐக்கு மாற்றப்பட்டு இறந்தவர்களின் குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும் நீதி கிடைக்கும் வரை திராவிட முன்னேற்றக் கழகம் அயராது போராடும் என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
உரத்த சிந்தனை
கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?
தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.
இந்தியா
ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!
கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை
நெல்லை
தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!
தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.
Entertainment News
Previous article
Next article