பேட்ட..ய தூக்கி சாப்பிடுறா மாதிரி… ஒரு டிரைலர்…! தீவிர யோசனையில் விஸ்வாசம் அஜித் டீம்!

சற்றுமுன் சினி நியூஸ் சினிமா லைஃப் ஸ்டைல்
viswasam trailer - 2026

பொங்கல் பண்டிகைக்கு 2 மாஸ் சினிமாஸ் ரசிகர்களை ஹிட் செய்கிறது. ஒன்று சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட! அடுத்தது தல அஜித்தின் விஸ்வாசம்! இரு படங்களும் பொங்கலுக்கு ரிலீஸாகும் தீவிர முனைப்பில் உள்ளன. இந்த இரு படங்களின் படக்குழுவினரும் படத்தை பற்றிய தகவல்களை அடுத்தடுத்து வெளியிட்டு ரசிகர்களின் நாடித்துடிப்பை எகிற வைத்து வருகின்றனர். அதற்கு ஏற்ப, ரசிகர்களும் சமூக வலைதளங்களில் இவற்றை தங்கள் பங்குக்கு டிரெண்ட் செய்து வருகின்றனர்.

ரஜினி நடித்த பேட்ட படத்தின் டிரைலர் நேற்று காலை வெளியான நிலையில், விஸ்வாசம் படத்தின் டிரைலர் எப்போது ரிலீசாகும் என்று அஜித்

ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், படத்தின் எடிட்டர் ரூபன் தனது ட்விட்டர் பக்கத்தில், கொல மாஸாக ஒரு டிரைலர் வருது. விஸ்வாசம் டிரைலர் விரைவில்.. என்று குறிப்பிட்டுள்ளார்.

எனவே, டிரைலரே டஃப் ஃபைட் கொடுக்கும் விதத்தில் ரிலீஸாக இருப்பது தெரிகிறது.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார். மதுரை பின்னணியில் உருவாகி இருக்கும் இந்த படத்தில்

நயன்தாரா, விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.