ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு ஊழல் மேல்முறையீட்டு வழக்கின் முக்கிய அம்சங்கள் : கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்

ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு ஊ ழல் மேல்முறையீட்டு வழக்கில் விசாரணை தொடர்பாக கர்நாடக அரசு நேற்று முக்கிய அம்சங்களை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
 
சொத்து குவிப்பு ஊ ழல் வழக்கில் முதலமைச்சர் ஜெயலலிதா உள்பட 4 பேரை விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு மற்றும் தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேலும் 6 நிறுவனங்களை வழக்கில் இருந்து விடுவித்ததற்கு எதிராகவும் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களின் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ் மற்றும் அமிதவராய் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்று வருகிறது. கடந்த 8–ந் தேதி நீதிபதிகள், ஒவ்வொரு தரப்பும் வாதங்களின் முக்கிய அம்சங்களை எழுத்துவடிவில் 2 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
 
கர்நாடக அரசு வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாடில் நேற்று முக்கிய அம்சங்களை தாக்கல் செய்யதில் கூறப்பட்டுள்ளதாவது:–
கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை முழுதாக ஏற்றுக்கொண்டாலும் அதில் உள்ள கணக்கு பிழையால் சொத்து விவரங்களின் மதிப்பு தவறாக கணக்கிடப்பட்டுள்ளது. இதனால் கிருஷ்ணானந்த் அக்னிகோத்ரி வழக்கின் அடிப்படையில் குற்றவாளிகளை விடுதலை செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாது.
 
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கப்பட்ட கடன்களை கணக்கில் எடுத்தும் தவறு நேர்ந்துள்ளது. உயர் நீதிமன்றத்தில் பல பிழைகள் சரி செய்யப்படவில்லை. இந்த வழக்கில் தொடர்புடைய நிறுவனங்களின் சொத்துகள் குற்றம்சாட்டப்பட்டவர்களின் சொத்துகள் அல்ல என்று உயர் நீதிமன்றம் கூறியிருப்பது தவறானதாகும்.
 
குற்றம்சாட்டப்பட்டவர்களின் சொத்து கணக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற தீர்ப்பில் கொடுக்கப்பட்டுள்ள கணக்கு விவரங்கள் தவறாக உள்ளன.இதுபோல பல்வேறு முக்கிய முரண்பாடுகள் அதில் பட்டியலிடப்பட்டுள்ளன.ஜெயலலிதா உள்ளிட்டோர் தரப்பில் முக்கிய அம்சங்கள் இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை.
 
ஏற்கனவே நீதிபதிகள் உத்தரவிட்டபடி இந்த மனுக்களின் மீதான விசாரணை பிப்ரவரி 2–ந் தேதி தொடங்குகிறது. 3 மற்றும் 4–ந் தேதிகளில் விசாரணை நடைபெறும் என்றும், மேலும் விசாரணையை தொடருவது குறித்து 4–ந் தேதி முடிவெடுக்கப்படும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

Topics

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Entertainment News

Popular Categories