தேமுதிக வழக்குரைஞர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் !

ஜல்லிக்கட்டு உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் தேமுதிகவைச் சேர்ந்த வழக்குரைஞர் ஜி.எஸ். மணி நேற்று தாக்கல் செய்தார். மேலும் உச்ச நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு மீதான நிலுவையில் உள்ள வழக்குகள் மீதான விசாரணையில் தன்னையும் மனுதாரராகச் சேர்த்துக் கொள்ள அனுமதிக்கும்படியும் அவர் கேரிக்கை விடுத்துள்ளார்.
 
ஜல்லிக்கட்டு தொடர்பாக ஜி.எஸ். மணி தனது மனுவில் தெரிவித்துள்ளதாவது :-
தமிழ்நாட்டில் பாரம்பரியமாக நடத்தப்பட்டு வந்த ஜல்லிக்கட்டு விளையாட்டுப் போட்டிகளில் காளைகளை ஈடுபடுத்த அனுமதி மறுத்து உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பால் அந்தப் போட்டிகளை நடத்த முடியாத நிலை உருவாகியுள்ளது. இதையடுத்து, காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் உள்ள போதும், காளைகளை துன்புறுத்தாமல் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு, ரேக்ளா பந்தயம் ஆகியவற்றுக்கு அனுமதி அளித்து மத்திய அரசு அரசாணை வெளியிட்டது. ஆனால், அதற்கும் உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இது தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகள் மீதான விசாரணையில் எனது தரப்பு வாதங்களை முன்வைக்க அனுமதி அளிக்க விரும்புகிறேன்.
 
தேமுதிக சார்பில் தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டுள்ளேன். அதைத் தவிர இந்த மனு தாக்கலுக்கும் அரசியலுக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. மூத்த வழக்குரைஞரை வைத்து ஒவ்வொரு விசாரணைக்கும் தலா ரூ.5 லட்சம் வரை செலவு செய்து வழக்காடுவதற்கும் எனக்கு நிதி வசதியில்லை. ஆனால், மக்களின் அடிப்படை உரிமை மறுக்கப்படும் இந்த விஷயத்தில் வாதிட எனக்கு உரிமை உள்ளது என்பதால் இந்த வழக்கில் என்னையும் மனுதாரராகச் சேர்த்து வாதத்தை முன்வைக்க அனுமதிக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஜல்லிக்கட்டுக்கு விதித்த தடை தொடர்பான தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனு, ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள் தாக்கல் செய்துள்ள மனு ஆகியவற்றின் மீதான விசாரணை நீதிபதிகள் அறையில் 21-01-2016 நடைபெறும் என்று ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அப்போது ஜி.எஸ். மணியின் மனுவும் பரிசீலனைக்கு ஏற்கப்படலாம் .
ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

Entertainment News

Popular Categories