யாருக்காக… யாரைக் காப்பாற்ற… லண்டர் டாக்டரும் சுகாதாரச் செயலரும் முற்படுகிறார்கள்?!: ஹரி எம்.பி. பகீர் கேள்வி!

சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்
hari mp - 2026

திருத்தணியில் செய்தியாளர்களைச் சந்தித்தார் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி. அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது…

திருவள்ளுர்: தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே ஆகியோர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் உள்ள நபர்கள்! இவர்கள் இருவரையும் தனி விசாரணை ஆணையம் அமைத்து விசாரிக்க வேண்டும் என்று சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் கூறியிருப்பதும் அதன் பின்னர் நடந்தவையும் பார்த்தால், ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பது உறுதி செய்யப்பட்டு வருகிறது

இதற்கு காரணம் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அவர் கொடுத்துள்ள பதில்தான். .

தமிழக அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவில்தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மேல் சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கு அழைத்து செல்லப்படவில்லை என்று கூறியுள்ளார் … இந்த பதிலை விசாரணையில் தெரிவித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இன்றி அவர் இப்படிக் கூறியுள்ளார்!

மேலும் சந்தேகம் இருப்பதாக நேற்று சட்டமன்றஉறுப்பினர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமிழக சட்டப் பேரவை முன்பு செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தோம்.

ஆனால் லண்டன் மருத்துவர் ஜெயலலிதா அவர்கள் வெளிநாட்டிற்கு சிகிச்சைக்கு வர விருப்பமில்லை என்று ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார் இந்த வீடியோ பதிவு யாருடைய வலியுறுத்தலில் வெளிவந்துள்ளது?! அந்த மர்மமான நபர்கள் யார்? தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனையும் லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பிலோ ஆகியோர்கள் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இவர்களை தூண்டிவிடும் நபர்கள் யார்? இது யாருக்காக? யாரைக் காப்பாற்ற?

ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள சந்தேகங்களை தனி விசாரணை ஆணையம் அமைத்து.. லண்டன் மருத்துவரையும் தமிழக சுகாதாரத்துறை செயலாளரையும் விசாரிக்க வேண்டும் என்று அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி திருத்தணியில் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.