தமிழகத்தில் கெயில் திட்டம் செயல்படுத்த உச்ச நீதிமன்றத்தில் அனுமதியளித்துள்ளதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டு வந்த இந்த தடையை, தற்போதைய மத்திய அரசு நீக்காமல், அதையே தொடர்ந்து வருவது கண்டனத்திற்குரியது என்றும் இவ்விவகாரத்தில், விவசாய மக்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து மக்கள்நலக்கூட்டணியும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் வைகோ கூறினார்.

