ஜிம்பாப்வேயில் வரும் 2019-ம் ஆண்டு நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச் சுற்று போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த தொடரில் ஜிம்பாவே தோல்வியடைந்ததை தொடர்ந்து, ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் பயிற்சியாளர்கள் அனைவரும் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர்.
இந்நிலையில் இந்தியாவின் முன்னாள் பேட்ஸ்மேன் ஆன லால்சந்த் ராஜ்புட்டை குறுகிய கால தலைமை பயிற்சியாளராக ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது.
லால்சந்த்திற்கு முதல் தொடரே மிகவும் சாவாலானதாக இருக்கும். ஜிம்பாப்வேயில் வரும் ஜூலை மாதம் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உடன் முத்தரப்பு டி20 தொடரில் பலப்பரீட்சை நடத்துகிறது.
லால்சந்த் ராஜ்புட் இந்தியத் தேசிய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன், இவர் இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலும், நான்கு ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1985 – 1987 ஆண்டுகளில் 1996 இல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



