ஜப்பானின் ஒசாகா நகரில் நடைபெறும் கோல்டன் கிராண்ட் பிரீ தடகள சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில், அமெரிக்க வீரர் ஜஸ்டின் காட்லின் தங்கப் பதக்கம் வென்றார். அவர் 10.06 விநாடியில் பந்தய தூரத்தைக் கடந்து முதலிடம் பிடித்தார். 100 மீட்டரை 9.58 விநாடியில் கடந்து உலக சாதனை படைத்த ஜமைக்கா நட்சத்திரம் உசேன் போல்ட் ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், காட்லின் 10 விநாடிக்கும் அதிகமான நேரத்தில் ஓடி தங்கப் பதக்கம் வென்றிருப்பது அதிவேக மனிதருக்கான வெற்றிடம் நிரப்பப்படாமல் இருப்பதை எடுத்துக் காட்டுவதாகவே உள்ளது.
10.06 வினாடிகளில் தங்கம் வென்ற அமெரிக்க வீரர்
Popular Categories



