ஐபிஎல் இறுதிப் போட்டியைத் தொகுத்து வழங்கும் நடிகர் யார்?

சற்றுமுன் விளையாட்டு

17 May 21 ranbir kapoor - 2026கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துவிட்டன. இவ்வாரம் நடைபெறும் பிளே ஆஃப் போட்டிகளைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை இறுதிப் போட்டி நடைபெறுகிறது.

இந்த நிலையில் இறுதிப் போட்டி நிகழ்ச்சியை பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் தொகுத்து வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் இரண்டு மணி நேர நிகழ்ச்சியில் ரன்பீர் கபூர், சல்மான் கான், ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ், கரினா கபூர், சோனம் கபூர் அகுஜா ஆகியோரும் பங்கேற்கின்றனர்.

இந்தி நடிகை மாதுரி தீக்‌ஷித்தும் இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாளை நடைபெறவுள்ள பிளே ஆஃப் சுற்றின் முதல் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத், சென்னை சூப்பர் அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.