மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியின் போது ஹைதராபாத் அணியின் பந்து வீச்சாளர் சித்தார்த் கவுல், ஐபிஎல் விதிகளை மீறியதற்காக எச்சரிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து ஐபிஎல் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹைதராபாத்
அணியின் பந்து வீச்சாளர் சித்தார்த் கவுல், நேற்று நடந்த மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ஐபிஎல் விதிகளை மீறியதற்காக எச்சரிக்கப்பட்டுள்ளார். அவர், ஐபிஎல் விதிமுறைகளில் 2.1.4ன் லெவல் 1-ல் குறிப்பிட்ட தவறை செய்துள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விதிமுறை மீறலுக்கான தண்டனை குறித்து அந்த அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.



