உலக அளவில் உள்ள 180 நாடுகளில் பத்திரிகை சுதந்திரத்தின் நிலை எவ்வாறு இருக்கிறது என்பது குறித்த 2018 ம் ஆண்டிற்கான ஆய்வை எல்லைகள் அற்ற செய்தியாளர்கள் அமைப்பு (ஆர்.எஸ்.எப் ) வெளியிட்டிருக்கிறது. அதன்படி பத்திரிகை சுதந்திரத்தில் இந்தியா 180 நாடுகளில் 138 வது இடத்தில் இருக்கிறது.
இந்தாண்டுக்கான சுதந்திரம் மிகுந்துள்ள நாடுகளின் பட்டியலில் இந்திய இரண்டு இடங்கள் பின்தங்கி 138-வது இடத்தில் உள்ளது. இதற்கு காரணம் இந்தியாவில் பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் எழுதுப
வர்கள், தங்கள் கருத்துகளை சுதந்திரமாக வெளியிட அச்சப்பட வேண்டிய நிலை இருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் உள்ள மத அமைப்புகளால் பத்திரிகையாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் மிக எளிதாக தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். இந்தியாவில் காஷ்மீர் மாநிலத்தில் பத்திரிக்கையாளர்கள் யாரையும் எளிதாக அணுக முடிவதில்லை. மேலும் தொடர்ந்து இந்தியாவில் பத்திரிகையாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களை சீர்படுத்த மத்திய அரசு முன்வருவதில்லை. பத்திரிகையாளர்களுக்கு எதிராக வரும் கொலை மிரட்டல்களை கூட மோடி அரசு கண்டு கொள்வதில்லை. ஒட்டு மொத்தத்தில் இந்தியாவில் பத்திரிகையாளர்களை பாதுகாக்க பொருத்தமான வழிமுறைகள் இதுவரை உருவாக்கப்படவில்லை.
இந்தாண்டுக்கான சுதந்திரம் மிகுந்துள்ள நாடுகளின் பட்டியலில் நார்வே முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் நார்வே முதலிடத்தை பிடிப்பது இது இரண்டாவது முறையாகும். இந்த பட்டியலில் பாகிஸ்தான் 139-வது இடத்தை பிடித்துள்ளது. சுதந்திரம் மிகுந்துள்ள நாடுகளின் பட்டியலில் வடகொரியா, எரித்திரியா, துர்க்மெனிஸ்தான், சிரியா மற்றும் சீனா கடைசி இடங்களில் உள்ளன.



