சென்னை: பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது சுஜா வாருணி விளித்த அந்த ‘அத்தான்’ நாந்தேய்ன்… என்று விளக்கம் அளித்துள்ளார் சிவாஜி கணேசனின் பேரன் சிவ குமார்.
நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசனின் மகன் ராம்குமாரின் மகன் சிவாஜி தேவ். படங்கள் சிலவற்றில் நடித்துள்ளார். இவர், பிக் பாஸில் வந்து பிரபலம் அடைந்த சுஜா வாருணியைக் காதலிப்பதாகவும்ம், நிச்சயதார்த்தம் நடந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
மேலும், திருப்பதி கோவிலில் வைத்து ஜோடியாக எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகி அந்தத் தகவலுக்கு உறுதியும் சேர்த்தது. இருப்பினும் நிச்சயதார்த்தம் என்று கூறியதை எல்லாம் சுஜா வாருணி மறுத்து வந்தார்.
இந்த நிலையில், சிவகுமார்டிவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், சுஜா வாருணியுடனான நட்புறவு குறித்து புகைப்படத்துடன் விளக்கம் அளித்துள்ளார். சுஜா வாருணியை நான் 11 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வருகிறேன். என் இயற் பெயர் சிவக்குமார் என்று தெரிவித்துள்ளார்.
As my mother passed away 2 years back I changed my screen name from Shivaji Dev to “shiva kumar” my birth name with her blessings, and I will continue my journey onscreen with this name! I’m the “Athaan” who she spoke about in “Bigboss” I’m the only partner there is!
— Shiva Kumar – Actor (@Shivakumar3102) May 20, 2018
என் தாயார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அவரின் ஆசியுடன் என் பெயரை சிவாஜி தேவில் இருந்து சிவகுமாராக மாற்றிக் கொண்டேன். இனி இந்தப் பெயருடன் தான் திரைப் பயணத்தை தொடர்வேன். பிக் பாஸ் வீட்டில் அவர் கூறிய அந்த ‘அத்தான்’ நாந்தேய்ன்…நான் மட்டுமே அவருடைய அந்த இணை என்று கூறியுள்ளார்.
To all @sujavarunee fans and my media friends, it’s my responsibility to clarify few things to see that none of your rumors hurt or affect other people’s lives. I have been in relationship with this gem of a person for more than 11years now..My Birth name is “ShivaKumar” pic.twitter.com/2OD6q7rh3G
— Shiva Kumar – Actor (@Shivakumar3102) May 20, 2018
எங்களின் திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன். அதுவரை இது குறித்து அமைதி காக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். நன்றி என்று தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார் சிவகுமார்.
So kindly my dear sweethearts never confuse or write something you don’t know which may affect people surrounding me and her.Soon I will let you all know an officialnews regarding our marriage!Until then we ask u to please maintain the respect on this issue.Thank u , god bless!
— Shiva Kumar – Actor (@Shivakumar3102) May 20, 2018
சிவகுமாரின் இந்த டிவிட்களை ரீட்வீட் அடித்து அதனை ஒப்புக் கொண்டுள்ளார் சுஜா வாருணி. இதனிடையே சுஜா வாருணி, சிவக்குமாரின் ட்வீட்களைப் பார்த்த ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.




