கேரளாவில்‘நிபா’வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நர்ஸ் ஒருவரின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படாமல், சீல் செய்து தகனம் செய்துள்ளனர்.
கோழிக்கோடு மாவட்டம் உட்பட ஒட்டுமொத்த கேரள மாநிலத்தை அச்சத்தில் உரைய வைத்துள்ள, உயிரைக்குடிக்கும் கொடூரன்தான் ‘நிபா’ வைரஸ். இந்த வைரஸ் பாதிப்பால் இதுவரை கேரளாவில் 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே. ஷைலஜா, இதுவரை 6 பேர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார். அத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் 10க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



