பெங்களூர் தேசிய நெடுஞ்சாலைக்கு வந்து சேர்ந்த பெருமாள் சிலை!

சற்றுமுன் சென்னை பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
62 feet perumal staue1 - 2026

ஒரு வழியாக பெங்களூர் தேசிய நெடுஞ்சாலைக்கு வந்து சேர்ந்தார் 64 அடி உயர பெருமாள்! கோவிந்தா.. கோவிந்தா என்ற கோஷத்துடன் ஒரு வழியாக பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை தொட்டுவிட்டார் பெருமாள்!

வந்தவாசி அருகே கொரக்கோட்டையில் உள்ள மலையை செதுக்கி 64 அடி உயர பிரமாண்ட பெருமாள் சிலை உருவாக்கப்பட்டது. இந்த சிலையை பெங்களூரில் உள்ள ஈஜிபுரா பகுதியில் உள்ள தனியார் தொண்டு நிறுவனம் மூலம் நிறுவப்படுகிறது. அதற்காக ஒரே கல்லில் அமைந்த பிரமாண்டமான மகாவிஷ்ணு சிலை வாகனத்தில் கொண்டு செல்ல தயாரானது.

இந்தச் சிலை 240 டயர்கள் கொண்ட ராட்சத லாரியில் புறப்பட்டது. எங்கெல்லாம் தடங்கல்கள், இடைஞ்சல்கள் வருகிறதோ அங்கெல்லாம் சிலை நிறுத்தப்பட்டு, இடையூறுகள் சரி செய்யப் படுகின்றன. வழியில் குறுக்கே வரும் பாலங்கள், கட்டடங்கள், கடைகள், வீடுகள், ரவுண்டானா என இடித்து அகற்றப்பட்டு பெருமாள் சிலை கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து வருகிறது. இடைஞ்சல்கள் வரும் இடங்களில் எல்லாம் பெருமாள் சிலை நிறுத்தி வைக்கப்படுகிறது.

62 feet perumal staue 2 - 2026

பாதைகள் சரி செய்யப்படும் வரை, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பெருமாளை பார்க்க பக்தர்கள் குவிகின்றனர். பூஜைகளை செய்தும், காணிக்கைகளை செலுத்தியும், செல்பிகளை எடுத்தும் மகிழ் கின்றனர். பிறகு சாலைகள் சீர்செய்யப்பட்டபிறகு, பெருமாளை அந்த பகுதி பொதுமக்கள் பக்தி பரவசத்துடன் வழி அனுப்பி வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் பெருமாள் சிலை கிருஷ்ணகிரிக்கு நேற்று மாலை கொண்டு வரப்பட்டது. ஆனால் அங்குள்ள மேம்பாலம் அருகில் உள்ள தரைப்பாலத்தின் அடியில் ராட்சத தடுப்புகள் அமைக்கும் வேலை நடந்து வந்ததாலும், அப்பணிகள் முடியும் வரையிலும் லாரி நிறுத்தி வைக்கப்பட்டது.

இதையடுத்து திருவண்ணாமலை கூட்ரோட்டில் திரண்ட மக்கள் திரண்ட மக்கள் கோவிந்தா கோஷத்துடன் பெருமாளை வழிபட்டனர். பெருமாளுக்கு தேங்காய்களை உடைத்து, கற்பூர தீபாராதனை காட்டினர். பிறகு தரைப்பாலத்தின் வேலைகள் முடிந்ததை அடுத்து பெருமாள் சிலை பெங்களூர் நெடுஞ்சாலையை வந்தடைந்தது. அப்போது கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் பெருமாளை வரவேற்று பார்த்து மகிழ்ந்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.