masood azhar - 2026

பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உளவுத் தகவலை அடுத்து ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசார் ராவல்பிண்டியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் இருந்து பஹவல்பூர் பகுதிக்கு அருகிலுள்ள மிகவும் பாதுகாப்பான மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்

கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி காஷ்மீரில் உள்ள புல்வாமா பகுதியில் ராணுவ வீரர்கள் மீது பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது தீவிர தாக்குதல் நடத்திய பின்னர் பாகிஸ்தான் இத்தகைய தாக்குதலை எதிர் பார்த்தது. எனவே உளவுத்துறை தகவலின்படி அவர் மருத்துவமனை இடமாற்றப்பட்டுள்ளார்

மேலும் ஐஎஸ்ஐ தகவல்படி முஜாகிதீன் தலைவர் சையத் சலாவுதீன் மற்றும் அசார் இருவரும் புல்வாமா தாக்குதலுக்கு பின்னர் பாதுகாப்பான இடத்துக்கு நகர்த்தப்பட்டுள்ளனர்.

காஷ்மீரின் புல்வாமா வில் தாக்குதல் நடந்தபோது ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசார் ராவல்பிண்டியில் ராணுவ மருத்துவமனையில் பாதுகாப்பாக சிகிச்சையில் இருந்தார்.

புல்வாமா தாக்குதலுக்கு பிறகு ராணுவம் முழு உத்வேகத்துடன் பயங்கரவாதிகளை அப்புறப்படுத்துவதில் தீவிரமாக களமிறங்கியுள்ளது. ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகளான கம்ரான், காஸி இருவரையும் அண்மையில் நடந்த பதில் தாக்குதலில் சுட்டுக்கொன்றது இந்திய ராணுவம்.

ALSO READ:  FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது இந்த தாக்குதலில் மவுலானா மசூத் அசார் கொல்லப்படலாம் என்று பாகிஸ்தான் உளவு நிறுவனம் முன்னரே எச்சரிக்கை விடுத்திருந்தது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending