பிரதமர் மோடி அமைதி ஏற்படுத்த ஒரு வாய்ப்பு தரவேண்டும்: கெஞ்சிய இம்ரான் கான்!

Published:

imran khan modi - 2026பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தான் முன்னர் கொடுத்த வாக்குறுதியின்படி சரியாக செயல்பட வேண்டும் என்று கூறிய ஒரு நாள் கழித்து இம்ரான்கான் ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார்

அதில் தனக்கு மேலும் ஒரு வாய்ப்பு அமைதியை ஏற்படுத்துவதற்குத் தர வேண்டும் என்று கோரியிருந்தார். அதே நேரம் இந்தியா நடவடிக்கை எடுக்க தகுந்த ஆதாரங்களை தங்களிடம் வழங்க வேண்டும் என்று இம்ரான் குறிப்பிட்டிருந்தார். அப்படி இந்தியா ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மீதான நம்பத் தகுந்த ஆதாரங்களை அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுப்போம் என்றும் இம்ரான்கான் தெரிவித்திருந்தார்

imran modi - 2026

முன்னதாக சனிக்கிழமை மோடி பொதுக்கூட்ட பிரசாரத்தில் பேசியபோது இம்ரான்கான் தன்னிடம் தான் ஒரு பத்தான் இன மகன் என்று கூறியிருந்தார். வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள மரியாதை தரத்தக்க குழுவாகத்தான் பஷ்டோ என்ற மொழியைப் பேசும் மக்கள் இருக்கின்றனர்! அந்த வழியில் வந்தவர் தான் தாம் என்று இம்ரான் கான் தன்னிடம் கூறியிருந்ததாக பிரதமர் மோடி தெரிவித்தார்

முன்னர் இம்ரான்கான் பதவி ஏற்ற நேரத்தில் மோடி அவருக்கு வாழ்த்துக் கூறிய போது இம்ரான் கான் தன்னிடம் இந்தத் தகவலை பகிர்ந்து கொண்டதாகவும், தான் மரியாதைக்குரிய குடும்பத்தில் இருந்து வந்தவர் என்பதை இம்ரான்கான் இப்போது நிரூபிக்க வேண்டும் என்றும் மோடி ராஜஸ்தானில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார்

ALSO READ:  FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

மேலும் இம்ரான் பதவியேற்றபோது மோடி அவருக்கு வாழ்த்து கூறியதுடன் பாகிஸ்தானில் உள்ள ஏழ்மை விலகவும் கல்வி இல்லாமை அறியாமை அகற்றவும் பாகிஸ்தானுக்கு இந்தியா நிச்சயம் உதவும் என்றும், இருவரும் இணைந்து பாகிஸ்தானிலுள்ள வறுமையையும் கல்லாமையும் மாற்றிக் காட்டுவோம் என்றும் உறுதி கூறியதாகக் கூறினார்

ஆனால் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தான் சொன்னபடி தற்போது நடந்து கொண்டு, பயங்கரவாதிகளுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மோடி கூறியிருந்தார்

இதற்கு பின்னர் இரு தினங்களுக்கு முன்னர் இம்ரான்கான் வெளியிட்ட அறிக்கையில், இந்தியா தகுந்த ஆதாரங்களை வழங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் மோடி தனக்கு அமைதியை ஏற்படுத்த மேலும் ஒரு வாய்ப்பு தர வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்

ஆனால் தற்போது இந்தியா பாகிஸ்தானுக்குள் புகுந்து பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறது. பாகிஸ்தானுக்கு பலமுறை ஆதாரங்களை அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் மேலும் மேலும் ஆதாரங்களை மட்டுமே கொடுத்துக் கொண்டிருப்பது கால விரயத்தையும் பயங்கரவாதிகள் மீதான  நடவடிக்கைத் தன்மையை நீர்த்துப் போகச் செய்வதற்கும் தான் காரணமாக அமையும் என்று கூறப்படுகிறது!

ALSO READ:  காணாமல் போன நயா பைசா கணக்கு!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img