பயங்கரவாதிகளை அழித்ததற்காக இந்தியாவுக்கு பில் தொகையாக பாகிஸ்தான் பணம் கொடுக்க வேண்டும்!

4545

டிவிட்டரில் மிகப் பிரபலமானவர் இமாம் மொஹம்மத் தவ்ஹிதி. இவர் இஸ்லாமிய மதக் கோட்பாட்டாளர். அதே நேரம், உண்மையான இஸ்லாம் மார்க்கம் என்ன போதிக்கிறது என்பதை கூட்டங்களில் சொல்லி வருபவர். சீர்திருத்த இமாம் என்று தன்னை அழைத்துக் கொள்ளும் இமாம் மொஹம்மத் தவ்ஹிதி, இன்று டிவிட்டர் பதிவுகளில் இந்திய ராணுவத்தின் தாக்குதல் குறித்து சில கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார்.

அதில், பாகிஸ்தான் தனது நாட்டில் பயங்கரவாத பிரச்னைகள் இருப்பதாக சொல்லிக் கொண்டிருந்தது. இதனால் பயங்கரவாதப் பிரச்னையை எதிர்கொள்ள பில்லியன் கணக்காக வெளிநாட்டு பணத்தைப் பெற்று வந்தது. ஆனால், பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில் தோல்வி அடைந்தது! இந்நிலையில் பாகிஸ்தானின் பிரச்னையை இந்தியா ஒரு மணி நேரம் முன்னர் தீர்த்து வைத்தது. அது பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீது ஆயிரம் கிலோ வெடிகுண்டுகளைப் போட்டு, அனைத்தையும் அழித்துவிட்டது. பாகிஸ்தான் இதற்காக பில் தொகையை இந்தியாவுக்கு செலுத்த வேண்டும்… – என்று கூறியிருக்கிறார்.

 

மேலும் இந்தியப் பிரதமர் மோடி, பாகிஸ்தானை மாடிஃபையிங்…
PM Modi is Modi-fying Pakistan. – Imam Mohamad Tawhidi –  என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த நேரத்தில் ஐ.நா.சபை இந்தியா பாகிஸ்தான் பிரச்னையில் தலையிடக் கூடாது. பாகிஸ்தானின் பயங்கரவாதம் இந்தியர்களை பல்லாண்டுகளாக வதைத்து வந்துள்ளது. அண்மையில் 50 இந்திய வீரர்களைக் கொன்றுள்ளது. பாகிஸ்தானின் மண் ஒரு காலத்தில் இந்தியாவுடன் இருந்தது. எனவே, பிரச்னை எங்கே இருக்கிறது என்று இந்தியாவுக்குத் தெரியும். அதை எப்படி தீர்ப்பது என்பதும் அதற்குத் தெரியும்… என்று கூறியுள்ளார்.

மேலும், பாகிஸ்தான் என்ன சொல்கிறது என்பதை எவருமே காது கொடுத்துக் கூட கேட்பதில்லை! பாகிஸ்தானின் பேச்சை எவரும் சட்டைசெய்வதுகூட இல்லை. இது போன்ற ஒரு அரசை நான் வாழ்நாளில் கண்டதில்லை! என்று கூறியிருக்கிறார் இமாம் மொஹம்மத் தவ்ஹிதி.

Pakistan says it has a terrorism problem. It has been taking billions in foreign aid to counter terrorism, but keeps failing. India solved Pakistan’s terrorism problem 1 hour ago. It dropped 1000KG of bombs on terror camps, fully destroying them. Pakistan must now pay the bill.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...