புதுச்சேரியில் ஆளுநருக்கு தான் சிறப்பு அதிகாரம்! பகீர் கிளப்பிய நாராயணசாமி!

Published:

20 July02 Narayanasamy - 2026

தமிழகம் வேற … புதுச்சேரி வேற… இங்கே ஆளுநருக்குதான் சிறப்பு அதிகாரங்கள் இருக்கிறது. அதை முதலமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும் என்று, புதுச்சேரி மாநிலம் குறித்த நிர்வாக நடைமுறைகளை தெள்ளத் தெளிவாக எடுத்துக் கூறுகிறார் நாராயணசாமி!

ஆளுநருக்குதான் சிறப்பு அதிகாரம் இருக்கு.. தமிழ்நாடு வேற.. புதுவை வேற.. என்று சொல்பவர் நாராயணசாமி! ஆம் தற்போதைய முதல்வர் நாராயணசாமி, முதல்வராக இல்லாத போது சொன்னவை…

தமிழ்நாடு வேற புதுச்சேரி வேற.. இங்க ஆளுநர் நிர்வாக அதிகாரி. அவருக்க் சிறப்பு அதிகாரம் இருக்கு… என்று சொல்லிவிட்டு, இன்று ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று தர்ணா போராட்டம் நடத்தி வரும் நாராயணசாமியேதான் இதைச் சொல்வதும்!

புதுவை முதல்வராக இருக்கும் நாராயணசாமி முன்னர் தெரிவித்த கருத்து இது.

இப்போது இரண்டரை வருடமாக முதல் அமைச்சராக இருக்கிறார்! அப்போது காங்கிரஸ் ஆட்சியில் முதல்வராக இருந்தார்! இப்போது புதிதாக துணைநிலை ஆளுநர் வந்திருக்கிறார். இந்த இரண்டரை வருடமாக அவர் சொன்னதையெல்லாம் துணைநிலை ஆளுநர் கையெழுத்து போட்டு செய்திருந்தார்! அப்போது ஏன் மாநிலம் வளரவில்லை! அப்போது ஏன் முன்னேற்றம் இல்லை???

ALSO READ:  இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ஆடி மாத திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

மாநிலத்தில் இப்போது புதிதாக கவர்னர் வந்த பிறகு இவர் குறை சொல்கிறார். பழைய கவர்னர் இருந்தபோது எந்த வளர்ச்சியும் இல்லை என்றால்! மத்திய அரசு எதுவும் செய்ய முடியாது! மத்திய அரசு என்ன செய்ய முடியும்? துணைநிலை ஆளுநர் தான் செய்ய முடியும்! சட்டம் ஒழுங்கு கையிலிருப்பது முதல்வரிடம்! புதுவை மாநிலம், தமிழகம் போல் கிடையாது!

புதுவை மாநிலத்தில் துணைநிலை ஆளுநர் தான் நிர்வாக அதிகாரி! ஒரு நிர்வாக அதிகாரிக்கு எல்லா அதிகாரமும் உண்டு! அந்த அதிகாரத்தின் அடிப்படையில் மாநில அரசு செயல்பட முடியவில்லை என்றால் முதலமைச்சர் செய்ய முடியவில்லை என்று சொன்னால் அதற்கு மாற்றாக ஒன்றை வைக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் ஆளுநருக்கு உண்டு… என்று இன்றைய சிக்கலுக்கான தீர்ப்பை அன்றே ஆளுநருக்கு எடுத்துக் கொடுத்திருக்கிறார் நாராயணசாமி.

எனவே, தீர்வு தெரிந்த நிலையில், தேவையற்ற போராட்டங்களை நடத்தி, அரசு நிர்வாகத்தை ஸ்தம்பிக்க செய்து,எந்த வேலையும் செய்யாமல், அரசுப் பணிகளும் நடத்தவிடாமல் பொழுது போக்கிக் கொண்டு வெறும் அரசியல் ஸ்டண்ட் அடித்துக் கொண்டிருக்கிறார் நாராயணசாமி என்கிறார்கள் வலைத்தளங்களில்!

ALSO READ:  பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

Related articles

Recent articles

spot_img