திருமா..! நேற்று ‘அப்செட்’… இன்று ‘ஆப்செண்ட்’… நாளை ‘சரண்டர்’!

thirumava - 2026இன்று திமுக., தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்துக்கு கூட்டணிப் பேச்சுவார்த்தைக்காக வருவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், இன்று வராமல் ஆப்செண்ட் ஆன திருமா, நாளை பங்கேற்கவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, தாம் கௌரவத்திற்காக என்றில்லாமல் கொள்கை அடிப்படையில் கூட்டணி குறித்த முடிவை எடுத்திருப்பதாகக் குறிப்பிட்டார் திருமாவளவன்..

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட திமுக., தரப்பு கூட்டணிப் பேச்சில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. முதலில் தனது கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு 10 தொகுதிகளை ஒதுக்கிக் கொடுத்தது. தொடர்ந்து முஸ்லிம் லீக்குக்கு ஒரு தொகுதி கொடுத்தது. அடுத்து கொமதேக., ஈஸ்வரனுக்கு ஒரு தொகுதி கொடுத்துள்ளது. அடுத்து, தோழமைக் கட்சிகளான மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா 2 தொகுதிகள் கேட்கும் நிலையில், இவர்களுக்கு தலா ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்க முடியும் என்று திமுக., தரப்பு கறார் காட்டி வருகிறது.

இந்நிலையில், நேற்று மதிமுக., விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருடன் கூட்டணிப் பேச்சு தொடரும் என்று கூறப் பட்ட நிலையில், அவர்களுக்கான அழைப்பு திடீரென ரத்து செய்யப் பட்டு, ஐஜேகே பாரிவேந்தர் அண்ணா அறிவாலயம் வந்தார். அவர் கூட்டணிப் பேச்சுவார்த்தைக்காக வந்திருப்பதாக ஐ.ஜே.கே. பாரிவேந்தருக்குச் சொந்தமான புதிய தலைமுறை தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது. அதற்கு ஏற்றார்ப் போல், பார்வேந்தர், கட்சியினர் சிலருடனும், தன் மகனுடனும் வந்திருந்தார். ஆனால், இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில் வெளியில் வந்த பாரிவேந்தர், திமுக.,வுக்கு தமது ஆதரவைத் தெரிவிக்கவே வந்ததாகக் கூறினார்.

[su_posts template=”templates/teaser-loop.php” posts_per_page=”3″ tax_term=”35″ order=”desc”]

ALSO READ:  FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

இந்நிலையில், நேற்று நடைபெறாது போன விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக.,வினர் உடனான பேச்சுவார்த்தையை இன்று காலை பத்தரைக்கு வைத்துக் கொள்வதாகக் கூறி, திருமாவளவனுக்கு அழைப்பு விடுக்கப் பட்டது.

இதனால் திருமா., இன்று இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு ஏற்றார்ப்போல், அண்ணா அறிவாலயம் வந்தார் அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்! அவர், துரைமுருகன், எ..வவேலு. ஆராசா பொன்முடி ஆர் எஸ் பாரதி உள்ளிட்ட திமுக கூட்டணிப் பேச்சுவார்த்தை மற்றும் தொகுதிப் பங்கீட்டுக் குழுவுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்தக் கூட்டத்தில், கூட்டணிக் கட்சிகளுக்கு எவ்வளவு தொகுதி ஒதுக்க முடியும்? திமுக எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது ? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாம்.

எனவே, இன்று திமுக-விடுதலை சிறுத்தைகள் இடையே தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப் படும் என்றும் ஒப்பந்தத்தில் அவர்கள் கையெழுத்திட இருப்பதாகவும் கூறப் பட்டது. எனவே திருமாவளவன் இன்று காலை 11 மணிக்கு அண்ணா அறிவாலயம் வருவதாகக் கூறப்பட்டது. ஆனால் அவர் வரவில்லை. இதனால் ஏமாற்றமே நிலவியது.

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

இது குறித்து தகவல் தெரிவித்த தொல்.திருமாவளவன், தனக்கு வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டியிருந்தால் இன்று தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க முடியவில்லை!, நாளை கலந்து கொள்கிறேன் என்று கூறினார்.

மேலும், இன்று தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசும் முன்னதாக, தமது கட்சியின் சமூக வலைத்தள குழுவினரிடம் உரையாற்றிய திருமாவளன், கெரளவத்திற்காக என்றில்லாமல், கொள்கை அடிப்படையில் கூட்டணி குறித்து சில முடிவுகளை எடுத்துள்ளதாகக் கூறினார். மேலும், தமது முடிவினை பின்னடைவாகக் கருதக்கூடாது என்றும் தனது கட்சித் தொண்டர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.

காரணம், தமது கட்சிக்கு இரு தொகுதிகள் கேட்டு வந்த நிலையில், ஒரு தொகுதி தான் ஒதுக்க முடியும் என்றும், அதிலும் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்றும் திமுக, தரப்பு வலியுறுத்தியதை திருமா தரப்பு ஏற்கவில்லை! ஆனால் திமுக., விடாப்பிடியாக இருப்பதால், இதுவரை மல்லுக்கட்டி, முரண்டு பிடித்து வந்த தொல்.திருமாவளவன் வேறு வழியிலாமல் திமுக.,வில் சரண்டர் ஆகிறார் என்று அவரது நடவடிக்கைகள் வெளிப்படுத்தியுள்ளன.

ALSO READ:  தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories