சட்டையை கிழித்துவிட்டு போட்டோ எடுக்க வா வா என்று கூப்பிடும் கட்சி அல்ல தேமுதிக!

Published:

Premalatha Vijayakanth - 2026

கிழியாத சட்டையை கிழித்துவிட்டு போட்டோ எடுக்க வா , வா என்று கூப்பிடும் கட்சி அல்ல தேமுதிக என்று கூறினார் பிரேமலதா விஜயகாந்த்!

தேமுதிக பொருளாளர் பிரேமலதா செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.  கூட்டணி இன்னும் முடிவாகவில்லை! இரண்டொரு நாளில் கூட்டணி குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்! என்று கூறினார் பிரேமலதா.

செய்தியாளர்கள்-பிரேமலதா சந்திப்பில், செய்தியாளர்களை ஒருமையில் பேசியதால்  பரபரப்பு ஏற்பட்டது. நீ, வா, போ என அநாகரீகமாக அவர் பேசியதாக, பிரேமலதாவுடன் செய்தியாளர்கள் மோதலில் ஈடுபட்டனர்.

தனிப்பட்ட அரசியல் ஆதாயத்திற்காக தேமுதிக குறித்து துரைமுருகன் உளறுகிறார் என்றார் பிரேமலதா!

எப்போது வேண்டுமானாலும் விளக்கம் தருவோம், நீங்கள் வாசலில் உட்கார்ந்து இருப்பீர்கள் என்பதற்காக நான் விளக்கம் தரமுடியாது என்று கூறினார்.

37 எம்பிக்களை ஜெயலலிதா வென்றும் தமிழகத்திற்கு எந்த நலனும் கிடைக்கவில்லை; இதுவே  அவர் இரு தேசியக் கட்சிகளில் ஒன்றுடன் கூட்டணி வைத்திருந்தால், தமிழகத்துக்கு நல்லது நிறையக் கிடைத்திருக்கும். எனவே தேமுதிக., இரு தேசியக் கட்சிகளுடன் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவே விரும்புகிறது. சட்டமன்றத் தேர்தலாக இருந்தால் முதல்வர் குறித்துப்பேசலாம்.

ALSO READ:  கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

முதலில் பாமக.,வை கூப்பிட்டு கையெழுத்து போட்டதுதான் பிரச்னைக்குக் காரணம். கடந்த முறை  தேஜ.,கூட்டணியின்போது எல்லாரையும் அமரவைத்து பேசி ஒரு முடிவுக்கு வந்தார்கள். ஆனால் இந்த முறை அவ்வாறு செய்ய வில்லை என்பதுதான் பிரச்னைக்கு காரணமே தவிர வேறு எதுவும் இல்லை! என்றார் பிரேமலதா.

Related articles

Recent articles

spot_img