அரசியல் கட்சிகளின் பார்வை திரும்புமா..

Published:

vall sva   தென்மாவட்டங்கள் வளம்பெற அரசியல் கட்சிகளின் பார்வை திரும்புமா.. வாசுதேவநல்லூர்: தென்மாவட்டங்கள் வளம்பெற வாசுதேவநல்லூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பழுதடைந்துள்ள செண்பகவல்லி அணைக்கட்டு பகுதியை நோக்கி அரசியல் கட்சிகளின் பார்வை திரும்புமா.. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கேரள – தமிழக எல்லை பகுதியில் திருவிதாங்கூர் மற்றும் சிவகிரி ஜமீன் ஆட்சி காலத்தில் வாசுதேவநல்லூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில்செண்பகவல்லியாறு அணைக்கட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டு 200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. அதன்படி வாசுதேவநல்லூர், சிவகிரி, சங்கரன்கோவில், மற்றும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் முதல் சாத்தூர் வரை விவசாய நிலங்கள் பயனடையும் வகையில் தமிழக எல்லை பகுதியை நோக்கி கன்னியா மதகு அமைக்கப்பட்டது. இந்த மதகு கடந்த 1976ம் ஆண்டு கனமழையால் இடிந்து விழுந்தது. அதன் பிறகு அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் அதனை சீர்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு தமிழக அரசின் பங்கு தொகையாக ரூ.5 லட்சம் கேரள அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. மதகு சீரமைப்பு பணியை இழுத்தடித்த கேரள அரசு 2006ம் ஆண்டு அப்பணியை தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி விட்டது. கன்னியா மதகு சீரமைக்கப்படாததால் நெல்லை, தூத்துக்குடி,விருதுநகர் ஆகிய மாவட்ட பகுதிகளில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் தரிசாக மாறின. இப்பகுதியில் விவசாயம் அடியோடு அழிவதை தடுக்க கன்னியா மதகை சீரமைக்க கோரி அப்போதைய தென்காசி எம்.பி லிங்கம், அன்றைய முதல்வர் கருணாநிதியை சந்தித்து மனு கொடுத்தார். இந்நிலையில் செண்பகவல்லி அணைக்கட்டு கன்னியா மதகு உடைப்பை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய லிங்கம் எம்பி அப்பகுதிக்கு சென்றார். அவருடன் 20 பேர் சென்றனர். வாசுதேவநல்லூர் – மதுரை மெயின் ரோட்டில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் மேற்கு தொடர்ச்சிமலை இருக்கிறது.இந்தப்பகுதியில் செண்பகவள்ளி அணைப்பக்கம் கேரளா அரசு தனது அதிகாரிகள் குழுவை முகாமிடசெய்துள்ளது. ஆனால் உரிய பாதுகாப்பு வசதியின்றி இந்த அணைப்பகுதிக்குள் சென்றாலும்,கேரள பகுதிக்குள் கால்வைக்க முடியாது.அந்தளவுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.இந்த அணையின் உடைப்பை சரிசெய்து விட்டால் தேன் மாவட்டங்களான திருநெல்வேலி.தூத்துக்குடி,விருதுநகர் மாவட்டம் சாத்தூர்வரை தண்ணீர்ககு பிரச்சினை வராது விவசாயம் செழிப்பாக நடைபெறும்.என்பதில் மாற்றுகருத்தில்லை.சமீபத்தில் வைகோ தலைமையில் இங்கு உண்ணாவிரதம் நடைப்பெற்றது,அதன் பின் புதிய தமிழகம் கிருஷ்ண சாமி தலைமையிலும் உண்ணாவிரதம் நடைப்பெற்றது.வைகோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.தமிழகத்திலுள்ள ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும் இந்த அணைப் பிரச்சனையில் ஒன்றிணைந்து போராடினால் வறட்சியில் கிடக்கும் பூமி செழிப்படையும் என்பது உண்மை.அரசியல் கட்சிகளின் பார்வை திரும்புமா..?

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

Related articles

Recent articles

spot_img