வாக்குச்சீட்டை போட்டோ எடுத்து வாட்ஸ்அப்பில் பதிவிட்டவரால் சர்ச்சை

Published:

vote - 2026

சமூக வலைதளத்தில் உலா வரும் வாக்குச்சீட்டால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

தபால் ஓட்டின் போது, தாம் வாக்களித்த வாக்குச்சீட்டின் புகைப்படத்தை, சமூக வலைதளத்தில் பதிவிட்ட நபரால், சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தேர்தல் பிரிவின் ஊடக தணிக்கை மற்றும் சான்றளிப்பு குழு அதிகாரிகள் விசாரிக்க உள்ளதாக தேர்தல் பணி அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொள்ளாச்சி மக்களவை தொகுதிக்கு கடந்த 7 -ஆம் தேதி தபால் வாக்கு பதிவு நடைபெற்றது.

அதில், வாக்களித்த அரசு ஊழியர் ஒருவர், தமது வாக்குச்சீட்டை செல்ஃபோனில் புகைப்படம் எடுத்து, சமூக வலை தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தப் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Related articles

Recent articles

spot_img