நதிநீர் இணைப்பு குறித்து ரஜினி கூறியது சரியானதல்ல.. : எதிர்க்கும் காங்கிரஸ் தலைவர் அழகிரி

சற்றுமுன் சென்னை தமிழகம்

ks alagiri congress - 2026

நதி நீர் இணைப்பு குறித்து ரஜினி கொண்டிருக்கும் கருத்த் சரியானதல்ல என்று கூறினார் கே.எஸ்.அழகிரி.

நதிநீர் இணைப்புத் திட்டம் குறித்து அதற்குரிய வல்லுநர்களிடம் உரிய விளக்கங்களை பெற்று, பின்னர், அதுகுறித்து ரஜினி காந்த் பேச வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில், ‘தேசம் காக்கும் கை’ என்ற தலைப்பில் காங்கிரஸின் பிரசார சிடி.,யை வெளியிட்டார் கே.எஸ். அழகிரி.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தேசிய அளவில், நதிநீர் இணைப்பு சத்தியமில்லாத ஒன்று என்று கருத்து தெரிவித்தார். எனவே, ரஜினி காந்த் ஏதோ உணர்ச்சி பொங்க ஒரு கருத்தை வைத்துக் கொண்டிருக்கும் முன்னர், இது குறித்து வல்லுநர்களிடம் கேட்டு தெளிவு பெற வேண்டும் என்று கூறினார்.

முன்னதாக நேற்று நடிகர் ரஜினிகாந்த், தேசிய நதி நீர் இணைப்புக்கு பாஜக., நடவடிக்கை எடுப்பதாகக் கூறியிருப்பதால், அதற்கு தனது ஆதரவு இருப்பதாகக் குறிப்பிட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.