வேலூரில் தேர்தலை நடத்த அதிமுக வேட்பாளர் வழக்கு – அவசரமாக விசாரணை

சற்றுமுன் தமிழகம்

12 Aug 05 High court - 2026

வேலூர் மக்களவைத் தேர்தல் ரத்தை எதிர்த்து அதிமுக சார்பில் அங்கு போட்டியிட்ட ஏ.சி.சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.

வேலூரில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் சுமார் 11 கோடியே 50 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. இந்த பணம் வாக்காளர்களுக்கு விநியோகிக்க கொண்டு வரப்பட்டது என்று வருமான வரித்துறை உறுதி செய்ததை தொடர்ந்து அந்த மக்களவைத் தொகுதிக்கான தேர்தலை, தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.

இதை எதிர்த்து, அந்த தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும், புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. திட்டமிட்ட நாளில் வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும் என்று முறையிடப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுவாக தாக்கல் செய்தால் அவசர வழக்காக விசாரிப்பதாகத் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவானது 11 மணிக்குள்ளாக விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.