தமிழகத்தில் விபத்துகள் அதிகரிக்கக் காரணம் சாலைகள் பராமரிப்பின்மையே! உயர் நீதிமன்றம் கண்டனம்!

சற்றுமுன் தமிழகம் மதுரை லைஃப் ஸ்டைல்

madurai high court - 2026

தமிழகத்தில் விபத்துகள் அதிகரிக்க சாலைகள் பராமரிப்பின்மையே காரணம் என்று  சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது.

தமிழகத்தில் விபத்துகள் அதிகரிக்க சாலைகளை முறையாக பராமரிக்காததே காரணம் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது. சாலை விபத்தில் கர்ப்பிணி புஷ்பா உயிரிழந்தது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இன்று  விசாரணைக்கு வந்தது

அப்போது இந்தக் கருத்தைக் கூறியது நீதிமன்றம்! இந்த வழக்கு விசாரணையின் போது, நீதிபதி கிருபாகரன் கூறுகையில், 1998ல் ஏற்படுத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தில், 25 ஆண்டுக்கு மேலாகியும்  திருத்தம் கொண்டு வராதது, பாதிக்கப்பட்டோருக்கான நீதியை மறுப்பதாகும்.

விதிகளை முறையாக பின்பற்றாதது, போதிய விழிப்புணர்வு இல்லாதது, முறையாக பராமரிக்காத சாலைகள் ஆகியவற்றால் தான் விபத்துகள் அதிகரிக்கின்றன என தெரிவித்தார்.

மேலும், விபத்தில் உயிரிழந்த புஷ்பா குடும்பத்துக்கு ஏற்கனவே வழங்கிய இழப்பீட்டை அதிகரித்து வழங்க வேண்டும் என காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவிட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.