‘மோடிபொய்’ என ஆங்கில அகராதியில் உள்ளதா?! ராகுலின் பொய்யும்! அகராதியின் மெய்யும்!

சற்றுமுன் தமிழகம்

modilie - 2026

புது தில்லி : எப்படியாவது பொய்களை அள்ளித் தெளித்து தேர்தலில் வென்று விடுவது என்ற குறிக்கோளுடன் இந்த முறை தேர்தலை எதிர்கொண்டது காங்கிரஸ் கட்சி. வந்த வரை லாபம், போனா முடி வந்தா மலை… என்ற வசனங்களுக்கு ஏற்ப, கிடைத்தவரை லாபம் என்ற கொள்கையுடன் தேர்தலை அணுகிய காங்கிரஸ், அதற்காக எந்த எல்லைக்கும் போகத் தயங்கவில்லை.

ஏற்கெனவே மத்திய பிரதேசத்தில், தாங்கள் மைண்ட் கேம் ஆடியதாகக் கூறிய காங்கிரஸ், அதே உத்தியை இந்த முறை நாடாளுமன்றத் தேர்தலிலும் காட்டத் தொடங்கியது.

இதன் ஒரு பகுதியாக, தேர்தல் பிரசாரம் நிறைவடையும் நாளில், ஆங்கில அகராதியில் ‘மோடி பொய்’ என்ற புதிய வார்த்தை சேர்க்கப்பட்டுள்ளதாக ராகுல் ஒரு டிவீட்
செய்திருந்தார். ஆனால் இதனை போலி என ஆக்ஸ்போர்ட் அகராதி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மே 15ஆம் தேதி அன்று ராகுல் தனது டுவிட்டர் பக்கத்தில் ஆங்கில அகராதியின் பக்கம் ஒன்றின் ஸ்கிரீன்ஷாட் எடுத்து பதிவிட்டார். அதில், ஆங்கில அகராதியில் ‘modilie’ என்ற புதிய வார்த்தை சேர்க்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.

rahul modi - 2026ஆக்ஸ்போர்டு அகராதி என ராகுல் தனது டுவீட்டில் குறிப்பிடவில்லை. ஆங்கில அகராதி என்று குறிப்பிட்டு இருப்பினும் ஆக்ஸ்போர்டு அகராதியின் பக்கம் போன்ற ஒரு பக்கத்தைத் தான், காங்கிரஸின் விளம்பரத்துடன் உருவாக்கப்பட்டு, ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது.

மேலும், modilie என்ற வார்த்தையின் பொருளாக, உண்மையை தொடர்ந்து திரித்துக் கூறுபவர், இடைவிடாமல் பொய் சொல்வதை தனது பழக்கமாகக் கொண்டவர், ஓய்வில்லாமல் பொய் பேசுபவர் என்பன போன்ற வாக்கியங்கள் இடம்பெற்றுள்ள ஸ்கிரீன்ஷாட்டை ராகுல் பகிர்ந்திருந்தார்.

modilie.in என்ற பெயரில் இணையப் பக்கம் ஒன்று துவங்கப்பட்டு, அதில் பிரதமர் மோடி இது வரை கூறிய  பொய்கள் பட்டியல் இடப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். ராகுலின் இந்த டுவிட்டர் பதிவை சுட்டுக்காட்டி உள்ள ஆக்ஸ்போர்டு அகராதி நிர்வாகம், அவர் பகிர்ந்துள்ளது போலியான படம் என்றும், ஆங்கில அகராதியில் அப்படி எந்த வார்த்தையும் சேர்க்கப்படவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது.Rahul Gandhi Narendra Modi - 2026

இவ்வாறு போலியான ஒரு போட்டோஷாப் படத்தை திட்டமிட்டு உருவாக்கி, அதனைப் பகிர்ந்து, பிரதமர் மோடி குறித்த அவதூறை பதிவிட்டதற்காக ராகுலை பலரும் காய்ச்சி எடுத்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.