ராசிபுரம் குழந்தை கடத்தல் வழக்கில் கைதான அமுதவள்ளி, ரவிச்சந்திரன், முருகேசன் உள்ளிட்ட 11 பேருக்கு ஜூலை 7-ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் சட்ட விரோதமாக குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக, சி.பி.ஐ.சி.டி., போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் விருப்ப ஓய்வுபெற்ற செவிலியர் உதவியாளர் அமுதவல்லி, அவரது கணவர் ரவிச்சந்திரன், ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன் உள்பட, 11 பேர் கைது செய்யப்பட்டு, சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஜாமினில் விடுவிக்கக்கோரி முருகேசன் சார்பில், நாமக்கல் மாவட்ட முதன்மை கோர்ட்டில், மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், அமுதவள்ளி, ரவிச்சந்திரன், முருகேசன் உள்ளிட்ட 11 பேருக்கு ஜூலை 7-ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு செய்து உத்தரவிட்டனர்.