
நெல்லையில் தாமிரபரணி மகாபுஷ்கர விழா களைகட்டி வருகிறது. நதிக்கு மங்கள ஹாரத்தி காட்டுவது என்பது புராதன மரபு. படித்துறைகளில் மாலை வேளையில் மங்கள ஹாரத்தி காட்டி, நதியைப் போற்றி வழிபடுவர். அந்த நடைமுறையை தாமிரபரணியில் தற்போது செய்து வருகின்றனர்.
இதை ஒட்டி, நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாமிரபரணி படித்துறையில் தாமிரபரணி நதிக்கு மங்கள ஆரத்தி காட்டப்பட்டது.




