இந்திரா காந்தியையே கைது செய்த தமிழர்… முன்னாள் சிபிஐ இயக்குனர் லட்சுமிநாராயணன் காலமானார்!

Published:

lakshminarayanan ex dgp - 2026

முன்னாள் டிஜிபி லட்சுமி நாராயணன் காலமானார். இவர் இந்திராகாந்தியை கைது செய்த பெருமைக்குரிய தமிழர்!

தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு முன்னாள் டிஜிபி லட்சுமிநாராயணன் தமது 91ஆவது வயதில் நேற்று காலமானார்.

சென்னை அண்ணா நகரில் வசித்து வந்தார் லட்சுமி நாராயணன். உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்ற விஆர் கிருஷ்ணய்யரின் சகோதரரான வி.ஆர். லட்சுமிநாராயணன், வழக்கறிஞருக்கு படித்தவர். ஆனால்  1951இல் ஐபிஎஸ் அதிகாரியாக பணியில் திறம்பட செயலாற்றினார்.

பதவி உயர்வுகள் பல பெற்றவர். 1955 க்குப் பின் தமிழக காவல்துறையில் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட்டார்! காமராஜர், அண்ணாதுரை, கருணாநிதி, எம்ஜிஆர் என பல முதல்வர்களுடன் பணியாற்றிய பெருமை இவருக்கு உண்டு!

1970 முதல் 80 வரை தில்லியில் சிபிஐ இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்!  பிரதமராக இருந்த இந்திரா காந்தியை கைது செய்தவர் என்ற சிறப்பையும் பெற்றவர் இவர்!

தம் பணிக்காலத்தே ஐபிஎஸ் அதிகாரிகள் பலருக்கு வழிகாட்டியாக இருந்தவர். தமிழக காவல் துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை ஏற்படுத்தியவர். இந்தத் துறையில் தமக்கு ஏற்பட்ட அனுபவங்களை புத்தகங்களாகவும் எழுதியுள்ளார்!

ALSO READ:  கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

வயோதிக நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த வி.ஆர். லட்சுமிநாராயணன், நேற்று காலமானார்! அவரது உடலுக்கு காவல் துறை அதிகாரிகள் உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர்

காலமான லட்சுமி நாராயணனுக்கு மகன், இரு மகள்கள் உள்ளனர். இவர்கள் வெளிநாட்டில் இருந்து வருவதால், இறுதிச் சடங்குகள் நாளை மறுநாள் நடத்தப்படும் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

V.R.LAKSHMINARAYANAN
U 91, 3rd Main Road, 7th cross street, Anna Nagar
Near Jaigopal Garodia School, Chennai.

Related articles

Recent articles

spot_img