தங்க தமிழ்ச்செல்வன் இடத்தில் ’அம்மா இட்லி சாப்டாங்க புகழ்’ சி.ஆர்.சரஸ்வதி: டிடிவி தினகரன் அதிரடி!

சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்

C. R. Saraswathi - 2026

அண்மையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து நீக்கப் பட்ட தங்க தமிழ்ச்செல்வன் இடத்தில் தற்போது சி.ஆர்.சரஸ்வதி நியமிக்கப் பட்டுள்ளார்.

அமமுக.,வில் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்தவர் தங்க தமிழ்ச்செல்வன். ஆனால் ஓரிரு ஊடக பேட்டிகளில் அவரது துடுக்குத்தனமான வார்த்தைகள், கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தி விட்டதாக அமமுக.,வினர் கூறி வந்தனர்.

இந்நிலையில், தங்க தமிழ்ச்செல்வன் நீக்கப் படலாம் என்று கூறப் பட்டது. அப்போது அவர், கொள்கையே இல்லாத கட்சிக்கு ஒரு கொள்கை பரப்புச் செயலாளர் எதற்கு என்று வினவினார். இதை அடுத்து அவர் கட்சியில் இருந்து வெளியேறி, திமுக.,வில் தன்னை இணைத்துக் கொண்டார்.

dinakaran flag e1521094084433 - 2026இந்நிலையில், தங்க தமிழ்ச்செல்வன் இருந்த பதவிக்கு விரைவில் தகுந்த நபர் நியமிக்கப் படுவார் என்று கூறினார் டிடிவி தினகரன். இந்நிலையில், அமமுக.,வுக்கு கொள்கை பரப்புச் செயலாளராக “அம்மா இட்லி சாப்பிட்டாங்க” புகழ் நடிகை சி.ஆர்.சரஸ்வதி நியமிக்கப் பட்டுள்ளார்.

இதுகுறித்து டிடிவி தினகரன் தரப்பில் வெளியிடப்பட்ட செய்தியில்,

???? அமமுக துணை பொதுச்செயலாளராக பழனியப்பன் மற்றும் ரெங்கசாமி நியமனம் செய்யப் பட்டுள்ளனர்.

???? பொருளாளராக வெற்றிவேல் நியமனம் செய்யப் பட்டுள்ளார்.

???? கொள்கை பரப்புச் செயலாளராக சி.ஆர்.சரஸ்வதி நியமிக்கப் பட்டுள்ளார் என்று  அமமுக பொதுச்செயலாளர் தினகரன் அறிவிப்பு வெளியிட்டார்.

மேலும், அம்மா மக்கள் முன்னேற்ற கழக நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து கல்லூர் வேலாயுதம் நீக்கப்பட்டுள்ளதாக, டிடிவி தினகரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.