வேலூர் தேர்தல் அறிவிப்பும், துரைமுருகனின் ‘ஐஸ்’ பேட்டியும்!

சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்

duraimurugan mindvoice - 2026

ஆகஸ்ட் 5ஆம் தேதி வேலூர் மக்களவைத் தொகுதிக்கு தேர்தல் நடத்தப் படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது, வேலூர் தொகுதியில் மட்டும் பணப்பட்டுவாடா முறைகேடான வகையில் அதிகம் நடைபெற்றது கண்டு பிடிக்கப் பட்டு, அதனால் தேர்தல் நின்று போனது.

அப்போது பெரும் ஏமாற்றத்துக்கு உள்ளானார், திமுக., சார்பில் வேட்பாளராகப் போட்டியிட்ட துரை முருகனின் மகன் கதிர் ஆனந்த். இந்தியா முழுக்க பாஜக., பெரும் எண்ணிக்கையில் வெற்றி பெற்ற போதும், தமிழகத்தில் திமுக., கூட்டணியே பெரும் வெற்றி பெற்றது. அந்த நேரத்தில் வேலூரிலும் தேர்தல் நடத்தப் பட்டிருந்தால், திமுக.,வின் வேட்பாளராக போட்டியிட்ட தன் மகன் வெற்றி பெற்று எம்.பி. ஆகியிருப்பான்; ஆனால் இப்படி ஆகிவிட்டதே என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார் துரை முருகன்.

இந்த நிலையில் இன்று ‘வேலூர் மக்களவை தொகுதியில் தேர்தல் அறிவிப்பு’ வெளியானது.

தேர்தல் அறிவிப்பு வெளியாகும் நாள் – ஜூலை 11.
வேட்பு மனு தாக்கல் கடைசி நாள்- ஜூலை 18.
வேட்பு மனு பரிசீலனை- ஜூலை 19.
வேட்பு மனுக்களை திரும்பப்பெற கடைசி நாள்- ஜூலை 22
தேர்தல் நடைபெறும் நாள்- ஆகஸ்ட் 5.
வாக்கு எண்ணிக்கை- ஆகஸ்ட் 9.

  • என்று அறிவிக்கப் பட்டுள்ள நிலையில், மீண்டும் ஒரு ஓட்டத்துக்கு தயாராகி வருகிறார் துரை முருகன். இந்த நிலையில் இன்று திமுக.,வின் இளைஞரணிச் செயலாளராக பதவி பெற்றுள்ளார் ஸ்டாலினின் மகன் உதயநிதி.

இந்த அறிவிப்பு வெளியானபோது முதல் வரவேற்பு பேட்டியாக துரை முருகனின் பேட்டியே வந்தது. அப்பாவைப் போல் மகனும் இளைய தலைமுறையை ஈர்ப்பார்: துரை.முருகன் சொன்னதன் பின்னணி!

இதனை திமுக., தனது டிவிட்டர் பதிவிலும் பகிர்ந்து கொண்டது.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.