எம்.பி., ஆனால்… அவமானம் வைகோ.,வுக்குதான்: கலாய்த்த ஹெச்.ராஜா!

Published:

நெல்லை மேற்கு மாவட்ட அனைத்து ஹிந்து சமுதாய பாதுகாப்பு பேரவை சார்பில் காவல்துறையை கண்டித்து செங்கோட்டை பாம்பே ஸ்டோர் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பா.ஜ.க தேசிய செயலாளர் H.ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
நெல்லை மேற்கு மாவட்ட அனைத்து ஹிந்து சமுதாய பாதுகாப்பு பேரவை சார்பில் காவல்துறையை கண்டித்து செங்கோட்டை பாம்பே ஸ்டோர் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பா.ஜ.க தேசிய செயலாளர் H.ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

மாநிலங்களவை எம்.பி. ஆனால், அவமானம் வைகோ.,வுக்குதான் என்று கலாய்த்தார் பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா!

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் திருநெல்வேலி மேற்கு மாவட்ட அனைத்து இந்து சமுதாய பாதுகாப்பு பேரவை சார்பில் தமிழக காவல் துறையையும் கண்டித்து செங்கோட்டை கீழ பஜார் பகுதியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாஜக., தேசிய செயலாளர் ஹெச்.ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்!

அப்போது அவர், தமிழகத்தில் அனைத்து துறை அதிகாரிகளும் இந்துக்களுக்கு ஏதிராக செயல்படுவது கண்டிக்கத் தக்கது. குறிப்பாக காவல்துறை இந்துக்கள் நடத்தும் விழாக்களுக்கு இடையூறு செய்வது, இந்து அமைப்பு நிர்வாகிகள் மீது பொய் வழக்குகள் போடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.  கடந்த 17 ஆண்டுகளாக நெல்லை மாவட்டத்தில் பணியில் இருக்கும் காவல்துறை அதிகாரிகளை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும்.

senkottai hindu meet4 - 2026தற்போது வைகோ எம்.பி.,க்காகப் போட்டியிடுகிறார். தேச துரோகம் என்றால்…. அப்படித்தான் பேசுவேன் மீண்டும் மீண்டும் பேசுவேன்… என்றார். இப்போது அவர் எம்பி.,ஆனால் உறுதி மொழி எடுக்க வேண்டும்! அப்போது இறையாண்மையைக் காப்பேன் என்று கூற வேண்டும். இதை விட அசிங்கம், இதை விட அவமானம் வேறு எதுவும் கிடையாது. உண்மையில் வைகோ தனக்குத் தானே அவமானம் செய்து கொள்கிறார்.. என்று  பேசினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய ஹெச்.ராஜா,  பாஜக., வின் வளர்ச்சி உயர்ந்து கொண்டே வருகிறது. கடந்த தேர்தலில் 19 சதவீதமாக இருந்த வாக்கு வங்கி இந்த தேர்தலில் 33 சதவீதமாக உயர்ந்துள்ளது.

ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!

உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக.,வுடன் கூட்டணி தொடரும்! வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் தேஜ., கூட்டணி வேட்பாளர் ஏ .சி சண்முகம் வெற்றி பெறுவார்.

மீண்டும் சொல்கிறேன்… வைகோ.,வுக்கு இதைவிட அவமானம் வேறு எதுவுமே இல்லை! நீதிமன்றத்தில் என்ன சொல்கிறார்? மீண்டும் மீண்டும் செய்வேன் என்கிறார். வேட்பு மனு தாக்கலின் போது இந்திய ஒருமைப்பாட்டை காப்பேன் என்கிறார். 24 மணி நேரத்தில் எத்தனை மாற்றங்கள் பாருங்கள்.

senkottai hindu meet1 - 2026வேலூர் தொகுதியில் ஏசி சண்முகம் வெற்றி பெறுவார். 1967இல் மூன்று படி லட்சியம், ஒரு படி நிச்சயம் என்று சொன்ன திமுக வெற்றி பெற்றது. அதுபோல் இந்த நாடாளுமன்ற தேர்தலிலும் மே 24ஆம் தேதி 5 பவுன் நகை அடகு ரத்து என்று சொல்லி வீட்டுக்கு வீடு இருந்த நகைகள் அனைத்தையும் வங்கிகளில் வைக்கச் செய்தார்கள். இது தான் அவர்கள் பெற்ற வெற்றியின் ரகசியம்.

ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது காங்கிரஸ் திமுக அரசுதான்! ஆனால் கேள்வி கேட்பது அனைத்தும் பாஜக.,வை! ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கொடுத்தது அதிமுக பாஜக அரசு மட்டுமே.!

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

இனிமேல் தினந்தோறும் உண்மையைச் சொல்லி விடுவது என்று முடிவு செய்து இனி தொடர்ந்து உண்மையே பேசுவோம். தினந்தோறும் நடைபெறும் தவறுகளை சுட்டிக் காட்டுவோம்.

senkottai hindu meet3 - 2026சங்கர மடம் இல்லை என்றால் திமுக, திக அமைப்பு வந்திருக்காது. இவருக்கு அரசியல் சோறு போடுவது சங்கரமடம் தான்.  ஸ்டாலினை அடுத்த தலைவராக கொண்டு வருவீர்களா என்று கேட்டதற்கு, திமுக என்ன சங்கர மடமா என்று கேட்டார் மு.கருணாநிதி. ஆனால் இன்று அடுத்து வாரிசுகள் வந்துவிட்டது. திமுகவில் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன் உள்ளிட்டோர் பெஞ்சு துடைக்கவும், போஸ்டர் ஒட்டவும் மட்டுமே பயன்படுவார்கள். அவர்களுக்கு தலைமைப் பொறுப்பு என்பது இனிக் கிடையாது.

நாடாளுமன்றத்தில் தமிழக எம்பிக்கள் தூங்கிக் கொண்டிருப்பார்களென மூன்று முறை டுவிட்டரில் போட்டுள்ளேன். ஊழலின் ஊற்றுக் கண்ணே இவர்கள் தானே. ஆனால் ஊழலை ஒழிப்பேன் என்று தயாநிதி மாறன், டி .ஆர். பாலு பேசலாமா.???

தமிழ் உணர்வுகள் இருந்தால் சமசீர் பள்ளி துவங்கி இருக்க வேண்டும்.

விவசாயிகளுக்காக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்த பிஜேபி தமிழகத்திற்கும், தமிழக விவசாயிகளுக்கும் மத்திய அரசு துரோகம் இழைக்காது என்றார் ஹெச்.ராஜா.

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

Related articles

Recent articles

spot_img