வேலூர், திருவண்ணாமலை உள்பட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்

Rain forecast Chennai 1 - 2026அடுத்த இரு நாட்களுக்கு வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கன மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், தென் மேற்கு பருவக் காற்றால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Rain forecast Chennai1 1 - 2026கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அரியலூர் நகர் பகுதிகளில் 9 செ.மீ., தர்மபுரி மாவட்டம் அரூரில் 8 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. திருவண்ணாமலை, விருதுநகர், நாகை, மதுரை மேட்டுப்பட்டியில் தலா 5 செ.மீ., மழை பெய்துள்ளது.

சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்! நகரின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மிதமான மழை பெய்யக் கூடும்! – இதனை சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.