அறவழி திகழ்ந்த மாந்தர்
அன்பிலே விளைந்த செல்வி
அறிவிலே சிறந்த திருவாம்
அலைமகள் வடிவம் அவளாம்

அரக்கனின் அடாத செயலால்
அகாலத்தில் அகன்ற உயிரே
அரங்கனின் திருவடி அடைந்தே
அகமற்று அமைதி கொள்வாய்!
—————————————————
அரங்கத்தான் அடியில் தோன்றி
பூமாலை போலே மிளிர்ந்த
பூவையள் சுவாதியைப் பிய்த்த
கொடுமகன் நெடுநாள் வாழ்க

மூப்பெய்தி நீணாள் வாழ்ந்து
தன்வழி தோன்றிய மக்கள்
தானிருக்க வருந்தி மாளும்
கொடுநிலை அனுபவம் கொள்க

இறையது துணையே நில்லா
இழிமனம் கொண்ட பேயன்
சுற்றத்து மாந்தர் நீங்கி
மருகியே நித்தம் மாள்க!

ஆத்திரம் கண்ணைக் கட்ட
அளித்திட்ட சாபம் இல்லை
நிதானம் கொண்டு எண்ணி
இறையிடம் கேட்கும் வரமே!!

– பார்வதேயன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending