கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால் உள்ளாட்சித் தேர்தல் பணி புறக்கணிப்பு
ஊரக வளர்ச்சித்துறை அலுவலகள் சங்கம் அறிவிப்பு
கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் உள்ளாட்சித் தேர்தல் பணியை புறக்கணிப்போம் என தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் குற்றாலம் பவ்டா அரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரம் வரவேற்றார் மாநில பொதுச் செயலாளர் கிருஷ்ணசாமி அறிக்கை வாசித்தார் பொருளாளர் நாகராஜன் வரவு, செலவு அறிக்கை வாசித்தார் அம்மையப்பன் துவக்க உரையாற்றினார் அப்பாத்துரை வாழ்த்துரை வழங்கினார்
கூட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணிபுரியும் ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்களுக்கு கடந்த 4 மாத காலமாக ஊதியம் வழங்கப்படவில்லை. எனவே வேலை உறுதித்திட்ட துணை வட்டார வளர்ச்சி அலுவலர் , உதவியாளர் ; மற்றும் கணினி இயக்குபவர் ஆகியோருக்கு ஊதியம் மற்றும் ஊராட்சி செயலர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்க போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.
தேர்தல் பணிக்காக ஊராட்சி செயலர்களுக்கு அகவிலைப்படியுடன் கூடிய ஒரு மாத கால ஊதியத்தை ஊக்க ஊதியமாக வழங்கிட வேண்டும். சத்துணவு பிரிவிற்கு பணியின் சிரமத்தை கணக்கில் கொண்டு சத்துணவு பணி நீங்கலாக அனைத்துப் பணிகளையும் சத்துணவு பிரிவில் இருந்து நீக்க வேண்டும். இப்பிரிவிற்காக கணினி இயக்குபவரையும் நியமிக்க வேண்டும். உதவி இயக்குநர் நிலையில் பதவி உயர்வு வழங்கிட வேண்டும்.
ஊராட்சி செயலார்களுக்கு ஊதியம் உயர்த்தப்பட வேண்டும். பொறுப்பு படி வழங்கிட வேண்டும். தேர்வுநிலை, சிறப்பு நிலை ஊதியம் வழங்கிட வேண்டும். 50 சதவீத பணிக்காலத்தை ஓய்வூதியத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும். ஓய்வூதியம் ரூ.1500 மற்றும் ஒட்டு மொத்த தொகை ரூ.60,000ம் வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கைகளை அரசு ஏற்றுக் கொண்டது. எனவே ஊராட்சி செயலர்களுக்கான கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டதற்கு அரசாணை வெளியிட வேண்டும். இல்லாவிட்டால் வரும் 29ம் தேதி பேக்ஸ் இயக்கம் நடத்தப்படும். ஜூலை 8ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம், 20ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடக்கும். இதற்கும் அரசு செவிசாய்காவிட்டால் ஆகஸ்ட் 4ம் தேதி முதல் உள்ளாட்சித் தேர்தல் பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்படும் என பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் உட்பட திரளானோர்கலந்து கொண்டனர் மாநில துணைத் தலைவர் சுமதி நன்றி கூறினார்
உள்ளாட்சித் தேர்தல் பணி புறக்கணிப்பு ஊரக வளர்ச்சித்துறை அலுவலகள் சங்கம் அறிவிப்பு
Popular Categories



