பாவூர்சத்திரம் அருகேயுள்ள குலசேகரப்பட்டி ஊராட்சி குறும்பலாப்பேரி குலசேகரன் தெருவில் சட்டமன்ற தொகுதி நிதி ரூ.7.10, ஒன்றிய பொது நிதி ரூ.3.60 மொத்தம் ரூ.10.70 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை தென்காசி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார் . ஒன்றிய கவுன்சிலர் ராஜசேகரபாண்டியன் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், ஒன்றிய குழு தலைவர் (பொ) குணம், அண்ணா தொழிற்சங்க மண்டல தலைவர் இள அரசு, மாவட்ட கவுன்சிலர்கள் முருகேசன், சேர்மபாண்டி, கல்லூரணி பஞ்சாயத்து தலைவர் தமிழ்செல்வன் என்ற ராமசாமி, ஒன்றிய செயலாளர் பாண்டியன் மணிவண்ணன், கத்தவராயன், தொழில்நுட்பபிரிவு செயலாளர் சாந்தசீலன் தமீம், ஊராட்சி செயலாளர் அமல்ராஜ், ஒன்றிய கவுன்சிலர்கள் ரமேஷ், பொன்னுலட்சுமி பொன்னுத்துரை, ராஜேஸ்வரி முருகேசன் மற்றும் அரசு ஒப்பந்ததாரர் சிதம்பரம் ,ராசையா, ஜெயராஜ், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அங்கன்வாடி மையம் தென்காசி எம்.எல் ஏ திறந்து வைத்தார்
Popular Categories



