லாரி மோதி மனைவி உயிரிழப்பு ! கணவன் பலத்தக் காயம் !

சற்றுமுன் சென்னை

accident 2 e1563426147205 - 2026செங்குன்றம் பகுதியில் எம்.ஏ நகர் என்னும் பகுதி அமைந்துள்ளது. அங்குள்ள நேதாஜி முதல் தெருவை சேர்ந்தவர் பிரபு. இவருடைய மனைவியின் பெயர் லதா வயது 38.  நேற்று காலை கணவரின் இருசக்கர வாகனத்தில் ஜி.எம்.டி சாலையில் வந்து கொண்டிருந்தார்.

சோழவரத்திலிருந்து புழல் நோக்கி அதிவேகத்தில் மினி லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. கட்டுப்பாட்டை இழந்த லாரி ஓட்டுநர் பிரபுவின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளார். பின்னால் அமர்ந்திருந்த லதா எதிர்பாராவிதமாக  கீழே விழுந்தார். லாரி அவர் மீது ஏறி சென்றது. இதனால் சம்பவ இடத்திலேயே லதா உயிரிழந்தார். கணவர் பிரபுவிற்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன.latha e1563425744355 - 2026அங்கிருந்த பொதுமக்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பிரபுவை தீவிர சிகிச்சைப் பிரிவில் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனை அறிந்த காவல்துறையினர் விபத்து பகுதிக்கு விரைந்து வந்தனர். லதாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ALSO READ:  இலவச பஸ் வேண்டாம்; கட்டண பஸ் அனுப்பி உரிய மரியாதை கொடுங்க போதும்!

காவல்துறையினர் விசாரணை நடத்திய போது மகேந்திரன் என்பவர் தான் லாரியை ஓட்டி விபத்து ஏற்படுத்தினார் என்பதை கண்டுபிடித்தனர். மகேந்திரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.