வெள்ளப் பெருக்கு; குற்றால அருவிகளில் குளிக்க தடை!

சற்றுமுன் சுற்றுலா நெல்லை லைஃப் ஸ்டைல்

fivefalls courtallam - 2026

நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் பகுதியில் தொடர்மழை காரணமாக குற்றாலம், ஐந்தருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து, அருவிகளில் குளிக்க போலீஸார் தடை விதித்தனர்.

நெல்லை மாவட்டம் குற்றாலம் பகுதியிலும், அருகில் உள்ள தென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக இதமான சூழல் நிலவி வருகிறது.

mainfalls courtallam aug7 - 2026கடந்த வாரம் இருந்த நிலை மாறி, ஞாயிற்றுக் கிழமை முதல் மழை பெய்து வருகிறது. இதனால் அருவிகளுக்கு நீர் வரத்து வரும் மலைப் பகுதியில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது.

கடந்த சில நாட்களாக நல்ல சீஸன் சூழல் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் வரத் தொடங்கியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.