தென்காசி போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வுகாண முயலும் போலீஸார்!

அடடே... அப்படியா? சற்றுமுன் நெல்லை லைஃப் ஸ்டைல்

tenkasi traffic - 2026

தென்காசி மாவட்டம் உருவாக்கப் படும் என்று மாநில அறிவித்த நிலையில், தனி அதிகாரி நியமிக்கப் பட்டு, தென்காசி மாவட்டம் குறித்த ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், தென்காசி நகரில் உள்ள மிகக் குறுகிய சாலைகளில், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் உருவாவது போலீஸாருக்கு மட்டுமல்ல, பொதுமக்களுக்கும் பெரும் தலைவலியாகவே உள்ளது.

இந்நிலையில், தென்காசி நகரில் சவாலாக இருந்து வரும் போக்குவரத்து நெருக்கடியை சரி செய்ய தென்காசி காவல் துணை கண்காணிப்பாளர் கோகுலகிருஷ்ணன் ஆலோசனையில் தென்காசி காவல்ஆய்வாளர் ஆடிவேல் தலைமையில் தென்காசி காவல் துறையினர் தென்காசி பஜார் பகுதிகளில் உள்ள இடங்களில் நெரிசல் ஏற்படாத வண்ணம் செயல்படுவது குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்தியும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தியும் சரி செய்து வருகிறார்கள்!

tenkasi traffic5 - 2026இதனால், தற்போது தென்காசி பஜார் பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடி இல்லாமல் எளிதாக சென்று வர முடிவதாக பொது மக்கள் கூறியுள்ளனர். இது போல் நிரந்தரமாக தீர்வு ஏற்பட்டால் மிகவும் நன்றாக இருக்கும் என்று, பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் வியாபாரிகள் வரவேற்பு தெரிவித்தனர்.

இதை அடுத்து,தினமும் போக்குவரத்து சீரமைப்பு விழிப்புணர்வு நடத்தப்படும் என்றும், வாகன ஓட்டிகள் மற்றும் வியாபாரிகள் தங்களது வாகனங்களை அதற்கென ஒதுக்கப்படும் இடங்களில் நிறுத்தி, மற்றவர்களுக்கும் அறிவுறுத்த வேண்டும் என்று காவல் ஆய்வாளர் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.