சுஷ்மா ஸ்வராஜ் கனவு நனவான பிரதிபலிப்பு!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

sushma swaraj sandart - 2026

முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நேற்று தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தமது 67வது வயதில், மாரடைப்பால் காலமானார். அவருக்கு பலரும் தங்களது அஞ்சலியை செலுத்தினர்!

சுஷ்மா ஸ்வராஜ் பணியாற்றிய காலத்தில் அவருடைய சிறப்பியல்புகள் அவர் மேற்கொண்ட சீர்திருத்தங்கள், உதவி நடவடிக்கைகள் என பலவற்றையும் தங்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஒடிசாவின் புகழ்பெற்ற மணல் சிற்ப கலைஞரான சுதர்சன் பட்நாயக் தன் தரப்பில் அழகிய மணல் சிற்பத்தை புரி கடற்கரையில் உருவாக்கி இருந்தார்! அதில் 370 நீக்கப்பட்ட கருத்தை முன்வைத்து இது சுஷ்மா ஸ்வராஜ்க்கான அர்ப்பணிப்பு என்று குறிப்பிட்டிருந்தார்.

சுஷ்மா சுவராஜ் தனது கடைசி டுவிட்டர் பதிவில் இத்தகைய நாளுக்காகத் தான் என் வாழ்நாள் முழுக்க நான் காத்திருந்தேன் என்று 370 சிறப்பு சட்டப்பிரிவு விலக்கிக் கொள்ளப்பட்டதற்கான மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார்.

அதை சுதர்சன் பட்நாயக் மணல் சிற்பத்தில் உயிரோட்டமுடன் பதிவு செய்திருந்தார். இது சமூக வலைத்தளத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.