தலைகவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அளித்த இன்ப அதிரச்சி…!

அடடே... அப்படியா? உள்ளூர் செய்திகள் சென்னை தமிழகம் நலவாழ்வு பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்

tuor twowell - 2026இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு காவல்துறை சார்பில் இன்ப சுற்றுலா!

தமிழகத்தில் கட்டாயம் வாகனம் ஓட்டுபவர் தலைக்கவசம் அணிய வேண்டும் என உயர்நீதி மன்றம் உத்தரவு விட்டது.

இதனை தொடர்ந்து பொதுமக்களிடமும், இருசக்கர வாகன ஓட்டிகளிடமும்  இதை கொண்டு சேர்க்கும் வகையில் காவல்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தி வருகின்றனர்.

மேலும் காவல்துறை சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை வைத்து விழிப்புணர்வு பேரணி நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில்  தலைக்கவசம் அணியாமல் வந்த  இருசக்கர  வாகன ஓட்டிகளுக்கு அபராதம் ஏதும் விதிக்காமல் மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கி காவல் துறை எச்சரித்து அனுப்பினார்.

தற்போது ஒரு புதிய முயற்சியை காவல் துறை அறிமுகம் செய்து உள்ளது.

அதன்படி இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டி வந்த 70 நபர்களை பிடித்து அவர்களுக்கு ஏதும் அபராதம் விதிக்காமல் வாகன ஓட்டிகள் அனைவரையும் பிடித்து காவல்துறை சார்பில் ஒரு வாகனம் ஏற்பாடு செய்து அவர்களை தலைக்கவச விழிப்பணர்வு இன்ப சுற்றுலா அழைத்து சென்று உள்ளனர்.

இந்த தலைக்கவச விழிப்புணர்வு இன்ப சுற்றுலா வாகனம் மாவட்ட அமர்வு நீதிமன்றம்  மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் , சார்பு நீதிமன்றம் , முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் , மகிளா மற்றும் கூடுதல் மகிளா நீதிமன்றம் ,குடும்ப நல நீதிமன்றம் உள்ளிட்ட 11 நீதிமன்றங்களுக்கு அழைத்து சென்று உள்ளனர்.

அங்கு தலை கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தால் காவல்துறையிடம் சிக்கிக் கொண்டு நீதிமன்றத்திற்கு அபராதம் செலுத்த சென்றால் அங்கு என்ன நடக்கும் , எவ்வளவு நேரமாகும் என்பதை உணர்த்தும் வகையில் இந்த சுற்றுலா அமைந்து உள்ளது.

இதில் கலந்து கொண்ட இருசக்கர வாகன ஓட்டிகள் கூறும்போது எங்களுக்கு இது ஒரு புதிய அனுபவமாக அமைந்துள்ளது.

எங்களை அழைத்து சென்று இப்படி ஒரு விழிப்புணா்வு சுற்றுலா அழைத்து சென்ற காவல் துறைக்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்

மேலும் இனி நாங்கள் அனைவரும் இருசக்கர வாகனம் ஓட்டும் போது தவறாமல் தலைகவசம் அணிந்துதான் ஓட்டுவோம்,

நாங்கள் மட்டுமல்ல இருசக்கர வாகனம் ஓட்டும் அனைவரிடமும் இது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்வோம்,

அவா்களையும் தலைகவசம் அணிந்து வாகனம் ஓட்டவேண்டும் என வலியுறுத்துவோம் என்று கூறினா்.

இந்த நிகழ்வு குறித்து அறிந்த பொதுமக்கள் காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனா்.

சமீபத்தில் கேரளா காவல்துறை தலைக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு லட்டு கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.