நாளை… வசந்த பஞ்சமி! என்ன செய்ய வேண்டும்?!

ஆன்மிகச் செய்திகள் லைஃப் ஸ்டைல்
saraswathi - 2026

நாளை 30 -1- 2020 ஸ்ரீ பஞ்சமி எனப்படும் வசந்த பஞ்சமி புண்ணிய தினம். வசந்த பஞ்சமி முதல் வசந்த காலத்தின் இயற்கைச் சூழலை உணர தொடங்கி விடுவோம். தேவி பாகவதத்தில் ஸ்ரீ பஞ்சமியின் மகிமை பேசப்படுகிறது.

சரஸ்வதி தேவி முதன் முதலில் தோன்றிய நாள் இது. இன்று சரஸ்வதி தேவியை விக்ரகம், புத்தகம் வடிவில் ஆவாகனம் செய்து பூஜிப்பதால் கோரிக்கைகள் நிறைவேறும். அறிவுக்கூர்மை கல்வி, ஞாபக சக்தி, வாக்சக்தி வளர்ச்சி அடையும்.

வெண்ணிற மலர்களை சந்தனத்தில் தோய்த்து சரஸ்வதி தேவியை அர்ச்சனை செய்து வெள்ளை வஸ்திரம், முத்து மாலை அணிவித்து, பசும் பாலில் அரிசி பாயசம், வெண்ணெய், தேங்காய், வாழைப்பழம் நிவேதனம் செய்து தேவியின் அருளைப் பெறும் அரிய பண்டிகை இது.

எல்லா தேவதைகளும் ஸ்ரீ பஞ்சமி அன்று சரஸ்வதி தேவியை வழிபடுகின்றனர். கோதாவரி தீரத்தில் வியாச மகரிஷி பிரதிஷ்டை செய்த பாசரா சரஸ்வதி க்ஷேத்திரத்தில் மிக விமரிசையாக இந்த பண்டிகை சாரதா ஜெயந்தியாக கொண்டாடப்பட்டு பிரம்மோற்சவம் நடத்தும் சம்பிரதாயம் உள்ளது.

மாக மாதம் சுக்ல பக்ஷம் பஞ்சமி திதியை ஒரிசா, மேற்குவங்காளம் போன்ற மாநிலங்களில் மிக விமரிசையாக கொண்டாடுவார்கள்.

ALSO READ:  செங்கோட்டையில் கிருஷ்ண ஜயந்தி விழா கோலாகலம்; கோவில்களில் குவிந்த பக்தர்கள்!

மாணவர்கள் சரஸ்வதி தேவியை வழிபட உகந்த நாள் இது. சரியான முடிவு எடுக்கும் புத்தியை அருளக் கூடியவள் சரஸ்வதிதேவி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.