இல்லத்தரசிகளே.. சிவப்பரிசி வடாம்!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
சிவப்பரிசி வடாம் - 2026

சிவப்பரிசி வடாம்
தேவையானவை:
சிவப்பு புழுங்கல் அரிசி – ஒரு கப், ஜவ்வரிசி – அரை கப்,
பச்சை மிளகாய் – 2,
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை,
சீரகம் – 2 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை: சிவப்பு புழுங்கல் அரிசியைக் களைந்து 7 மணி நேரம் ஊறவைக்கவும். ஜவ்வரிசியையும் தனியாக 2 மணி நேரம் ஊறவைக்கவும். ஊறவைத்த அரிசியை கிரைண்டரில் போட்டு அரைக்கவும். பாதி அரைபட்டதும், சீரகம், ஊறவைத்த ஜவ்வரிசி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து அரைக்கவும்.

அடிகனமான பாத்திரத்தில் நீர் விட்டு, கொதிக்க ஆரம்பித்ததும் அரைத்த மாவை சிறிது, சிறிதாக ஊற்றி கைவிடாமல் கிளறவும். இத னுடன் பெருங்காயத்தூள் சேர்க்கவும். மாவு மேலே தெறித்து விழாமல் கவனமாக கிண்டி (தீயைக் குறைத்து வைக்கவும்) வெந்ததும் இறக்கவும். முறுக்கு அச்சில் எண்ணெய் தடவி, மாவைப் போட்டு, சுத்தமான துணி (அ) பிளாஸ்டிக் ஷீட்டில் விருப்பமான வடிவத்தில் பிழிந்து, வெயிலில் வைத்து, திருப்பிப் போட்டு 2, 3 நாட்கள் காயவிட்டு எடுக்கவும். இதை ஒரு வருடம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.