litchi fruit - 2026

கோடைக்காலத்தில் வட இந்தியாவில் அதிகம் கிடைக்கும் ஓர் பழம் தான் லிச்சி. சீனாவைப் பூர்வீகமாக கொண்ட இந்த லிச்சி இந்தியா, வங்கதேசம் போன்ற நாடுகளில் கோடைக்காலத்தில் விலை மலிவில் கிடைக்கும்.

பிங்க் நிறத் தோல் கொண்டு முட்டை வடிவில் இருக்கும் இப்பழம், பல்வேறு ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது.

தற்போது இப்பழம் தென்னிந்தியாவின் சூப்பர் மார்கெட்டுகளில் அதிகம் கிடைப்பதைக் காணலாம். இப்பழம் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் அற்புதமான சுவையுடன் இருக்கும்.

இதனடைய வாசம் பூவின் வாசத்தைப்போல் இருக்கும். இந்த தனித்தன்மை பெற்ற நறுமணத்திற்காகவே காக்டைல்களில் இதனை பயன்படுத்துவர். இந்த பழத்தை பறித்தவுடன் உண்ணும்போது இந்த மணம் அதிகம் கவரப்படும்.

லிச்சி பழத்தில் பலவகை ஊட்டச்சத்துகள் உள்ளன. வைட்டமின் சி, வைட்டமின் b6, நியாசின், ரிபோபிளவின், போலேட் , தாமிரம்,பொட்டாசியம், பாஸ்போரஸ் , மெக்னீசியம், மாங்கனீஸ் போன்ற ஊட்டச்சத்துகள் லிச்சியில் அதிகம் உள்ளது.நார்ச்சத்து, புரதம், பாலிபீனாலிக் கூறுகள் அதிக அளவில் உள்ளன.

ALSO READ:  ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிவகாசியில் காலண்டர் ஆல்பம் வெளியீடு!

லிச்சி பழத்தில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. ஆகவே இதனை உட்கொண்டால் செரிமானம் சீராக நடைப்பெற்று, கோடையில் ஏற்படும் வயிறு கோளாறுகளில் இருந்து விடுபடலாம்.

கோடையில் கிடைக்கும் லிச்சிப் பழத்தை உட்கொள்வதன் மூலம் உடல் எடையை வேகமாக குறைக்கலாம். ஏனெனில் இதில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் உள்ளது. இதனால் இதனை உட்கொண்டால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும்.

லிச்சிப் பழத்தில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு பொருள் உள்ளதால், இதனை உட்கொண்டால் பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோயில் இருந்து நல்ல பாதுகாப்பு கிடைக்கும்.

லிச்சி பழத்தை அதிகம் உட்கொண்டு வருபவர்களுக்கு, இதய நோய்கள் வரும் வாய்ப்பு குறையும். இதற்கு அதில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் தான் காரணம்.

லிச்சி பழத்தில் உள்ள பைட்டோ-கெமிக்கல்கள், செல்களின் அசாதாரண வளர்ச்சியைத் தடுப்பதோடு, கண் புரை ஏற்படுவதையும் தடுத்து, கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

லிச்சிப் பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இப்பழத்தில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலை நோய்களின் தாக்கத்தில் இருந்து நல்ல பாதுகாப்பு. லிச்சிப் பழம் உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்க உதவும்.

ALSO READ:  அந்த 7 போக்குகள் : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

எப்படியெனில் இதில் உள்ள வைட்டமின் சி, உடலின் இரும்புச் சத்தை உறிஞ்சும் திறனை அதிகரிக்கும். இதன் காரணமாக இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி அதிகரித்து, இரத்த சோகை வரும் வாய்ப்பு குறையும்.

லிச்சி பழம் நம் வயிற்றுக்குள் உள்ள கெட்ட கிருமிகளை அழிப்பதில் திகழ்ந்து விளங்குகிறது .இதில் இயற்கையாக உள்ள ஒரு காரணி வயிற்றில் உள்ள பாக்டீரியாக்கள் போன்றவைகளை சரி செய்ய உதவுகிறது.

லிச்சியில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் இதனை குறைந்த அளவு உட்கொள்வது நல்லது. இந்த பழம் உடல் வெப்பத்தை அதிகரிப்பதால், அதிகமாக உட்கொள்ளும்போது மூக்கில் இரத்தம் வருதல், காய்ச்சல், வறண்ட தொண்டை போன்றவை ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

இரவு உணவைச் சாப்பிடாமல் லிச்சிப் பழங்களை குழந்தைகள் உண்பதைத் தவிர்க்கவேண்டும் என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending